தமிழகம் Subscribe to தமிழகம்
டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது தமிழர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து போற்றுவோம்!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். … Read more
மின்வாரியத்தில் இனி தமிழில் ஆணை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளர் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘அரசாணைகளை தமிழில் வெளியிடுதல். இதன் தொடர்ச்சியாக மின்வாரியத்தில் , இனி வரும் நாள்களில் அனைத்து மின்வாரிய ஆணைகளையும் தமிழிலும்… Read more
பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார்!: மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!
மறைந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மாணிக்க… Read more
தமிழ் மொழி கட்டாயம் அறிவிப்பு எதிரொலி புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40… Read more
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதி
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை பள்ளி கட்டட விபத்து!: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவரின் குடும்பத்தினரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை… Read more
‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!
பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், ‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு. ரவி தமிழ் வாணன் (புரட்சி எழுத்தாளர்… Read more
கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளிக்கு சென்ற சிறுமி உடல்கருகி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு!!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை அருகே பாச்சலூர் மலைக்கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். 16-12-2021 அன்று காலை சிறுமி, அக்கா, தம்பியுடன் இப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். மதிய உணவு… Read more
தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்!!
தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை : ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம்… Read more
சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டின் சிறப்பம்சங்கள்!!!
சென்னையின் கலெக்டர் பிரான்சிஸ் வைட் எல்லீஸ் 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல்… Read more