சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டின் சிறப்பம்சங்கள்!!!

சென்னையின் கலெக்டர் பிரான்சிஸ் வைட் எல்லீஸ் 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது.
எல்லிஸின் நீண்ட கல்வெட்டு திருவள்ளுவரைப் பாராட்டியது மற்றும் வறட்சியின் போது தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவரது திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட கவிதை தமிழ் கல்வெட்டு கீழே காட்டப்பட்டுள்ளது:
எல்லீசன் கல்வெட்டு
—————————–
சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குட கடலளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டாரகாரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய்
இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வரு
..றாச் செல்லா நின்ற
இங்கிலிசு வரு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருக்கு மேற் செல்லா நின்ற
பஹுதான்ய வரு த்தில் வார திதி
நக்ஷத்திர யோக கரணம் பார்த்து
சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு
துரவு கண்டு புண்ணியாஹவாசநம்
பண்ணுவித்தேன்
 
சென்னையின் ஆட்சியராக இருந்தபோது மின்ட் சாலையின் தலைவராகவும் இருந்ததால் திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து அவருக்கு தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார்.
உரை இன் படமாக இருக்கக்கூடும்
 
 
 
 
 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: