Archive: Page 60
ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டபோதே ஒட்டுமொத்த உலகமும் அவரை வியந்து பார்த்தது. தற்போது அதன் தாய்… Read more
2 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் ; உதவிய தமிழர்!
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்தும் பொருட்டு இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் நிலவை நெருங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு… Read more
டைட்டனின் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கை கடிகாரங்கள்!
நொடிப்பொழுதும் தமிழை மறந்திடாத நெஞ்சங்களுக்கு ஏற்ற பரிசு ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது டைட்டன் நிறுவனம். தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கைக் கடிகாரங்கள் கொண்ட ‘நம்ம தமிழ்நாடு’ கலக்ஷனை இனி அனைத்து தமிழக… Read more
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் கோரிக்கை!
இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத்… Read more
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்!
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும்,… Read more
கள்ளக்குறிச்சி அருகே, கி.பி 10-ம் நூற்றாண்டு பிச்சாடனர் சிற்பம் கண்டுபிடிப்பு!
சிவமூர்த்தங்கள் 64-ல் ஒன்றான பிச்சாடனார் திருக்கோலத் திருமேனி மீனாட்சியம்மன் கோயில், அண்ணாமலையார் கோயில் என மிகச்சில சிவாலயங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. தற்போது, திருக்கோவிலூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் (புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி)… Read more
99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை!
இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹம்பந்தொட்டா, ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்து வருகிறது. 2017-ம் ஆண்டு இலங்கையின் அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, ஆகிய இருவரும் ஹம்பந்தொட்டாவில் இருக்கும் துறைமுகத்தை சுமார் 99 ஆண்டுகளுக்கு… Read more
இலங்கை அரசு அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்கும் என நம்புகிறேன்! – பிரதமர் மோடி!
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடியரசுத் தலைவர்… Read more
கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!
கீழடி 6-வது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இன்று மதுரை விமான… Read more
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை!
உலகத் தமிழர்களின் பங்களிப்போடு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் நிறைவுபெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதற்கான நிதி திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன…. Read more