டைட்டனின் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கை கடிகாரங்கள்!

டைட்டனின் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கை கடிகாரங்கள்!

நொடிப்பொழுதும் தமிழை மறந்திடாத நெஞ்சங்களுக்கு ஏற்ற பரிசு ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது டைட்டன் நிறுவனம். தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கைக் கடிகாரங்கள் கொண்ட ‘நம்ம தமிழ்நாடு’ கலக்ஷனை இனி அனைத்து தமிழக டைட்டன் ஷோ ரூம்களிலும் வாங்கலாம்.

தமிழ் எழுத்துகள்:

எண்களுக்கு பதிலாக ‘நான்கு, எட்டு, பத்து’ என மணிகளைக் குறிக்கும் தமிழ் எழுத்து பொறித்த வாட்ச்சுகளும் டைட்டனின் நம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் அடங்கும். தமிழ் ஆர்வலர்களைக் கவரும் விதமாக அமைந்திருக்கும் இந்தவகை வாட்ச்சுகள், தமிழ் போற்றும் நவீன தமிழ் இளைஞர்களுக்கு சிறப்பான பரிசாக அமைந்துள்ளது.

கடிகாரங்கள் அனைத்திலும் ‘டைட்டன்’ எனத் தமிழிலேயே முத்திரை பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழின் மகத்துவம் உலகம் முழுக்க பரவிவரும் இவ்வேளையில், தமிழ் மணம் பரப்பும் கடிகாரங்களை வெளியிட்டு தமிழர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: