தமிழகம் Subscribe to தமிழகம்
தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
‘தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்’ என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள… Read more
வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆறு மைய மண்டபம், அணை திறந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம்!
வைகை ஆற்றில் அமைந்துள்ள மைய மண்டபத் தூண்கள் கற்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கும் அளவுக்கு சிதிலமடைந்துள்ளது. வைகை அணை திறக்கப்பட்டால் ஆற்றில் வரும் வெள்ளத்தில் இந்த மண்டபம் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில், யானைக்கல் பாலம் அருகே… Read more
கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! – முதல்வர் அறிவிப்பு!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா மாநிலம் சிக்கி தவிக்கிறது. நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்து… Read more
`முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது’ – பென்னிகுவிக்கின் பேத்தி!
“முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும் போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும்” கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தி வேதனையுடன்… Read more
295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது!
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் தனபால், கடந்த 12 ஆண்டு காலம், மருத்துவ விடுப்பு எடுக்காமல்,… Read more
மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!
மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக கிடப்பதாக வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் அகதிகள் முகாமிற்கு சென்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா.இவர் கடந்த 2016… Read more
72-வது சுதந்திர தின விழா! – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளில்… Read more
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு துணைவேந்தராக ஷீலா ஸ்டிஃபனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகம் கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்துக்கான துணைவேந்தர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், துணைவேந்தரை… Read more
விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!
இலங்கை கடற்பகுதி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து போது எந்தவொரு கடத்தல்கார்களும் உள்ளே நுழைய முடியவில்லை என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த… Read more
சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!
சம்ஸ்கிருத வழிபாட்டு முறைகளுக்கு எதிராகக் கரூரில் 18 சித்தர்களுக்கும் தமிழன்னைக்கும் திருவள்ளுவருக்கும் பாதரசத்தில் சிவனுக்கும் சிலை அமைத்து தமிழ்ச் சித்தர்கள் கோயிலைக் கட்டி அசத்தி இருக்கிறார் பொன்.பாண்டுரங்கன் சுவாமிகள் என்பவர். கரூர் மாவட்டம், வெண்ணைமலை என்னும் இடத்தில்தான் இந்தத் தமிழ் சித்தர்கள்… Read more