72-வது சுதந்திர தின விழா! – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!

72-வது சுதந்திர தின விழா! - தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!

72-வது சுதந்திர தின விழா! – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். தற்போது தமிழக அரசு சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதில், ”சிறந்த மாநகராட்சியாக திருப்பூர்து” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சியாக கோவில்பட்டியும், அடுத்தடுத்த இடங்களில் தேனி, கம்பம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பேரூராட்சியாக சேலம் ஜலகண்டபுரமும், அடுத்ததாக, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சிறந்த துறைக்கான விருதில் பதிவுத் துறை முதல் இடத்தைப் பெற்றது. இரண்டாம் இடம் உணவுத் துறைக்கும், மூன்றாம் இடம் சுகாதாரத் துறைக்கும் கிடைத்துள்ளது.

துணிவு மற்றும் சாகசத்துக்காக வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது, கடந்த ஆண்டு தனியாளாக விறகு கட்டையைக் கொண்டு புலியை விரட்டிய முத்துமாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தஷ்ஷா குழுவுக்கு அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இளைஞர் விருது, தேனியைச் சேர்ந்த பாஸ்கரன், கடலூரைச் சேர்ந்த மகேஷ் பெண்கள் பிரிவில், திருநெல்வேலியைச் சேர்ந்த அஷ்வீதாவுக்கும் அறிவிக்கப்பட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: