சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!

சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!

சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!

சம்ஸ்கிருத வழிபாட்டு முறைகளுக்கு எதிராகக் கரூரில் 18 சித்தர்களுக்கும் தமிழன்னைக்கும் திருவள்ளுவருக்கும் பாதரசத்தில் சிவனுக்கும் சிலை அமைத்து தமிழ்ச் சித்தர்கள் கோயிலைக் கட்டி அசத்தி இருக்கிறார் பொன்.பாண்டுரங்கன் சுவாமிகள் என்பவர்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை என்னும் இடத்தில்தான் இந்தத் தமிழ் சித்தர்கள் கோயிலை அமைத்துள்ளார். தமிழ் சித்தர்கள் கோயிலையும் ஆத்மஞான சன்மார்க்க தியானத் திருச்சபை தியான மண்டபத்தையும் அமைத்துள்ளார் அவர். அதாவது, சித்தர்கள் வழியில் தமிழ் ஆன்மிகம் வளர இவர் அரும்பாடுபடுகிறார்.

“நான் ஆரம்பத்தில் தீவிர கடவுள் மறுப்பாளனாக இருந்து, திராவிடர் கழக அனுதாபியாக இருந்தேன். ஆனால், எனக்குள்ளும் தெய்வ சமிக்ஞைகள் தோன்றி, அதன்பிறகு ஆன்மிகத்தின் மீது அதீத நாட்டம் கொண்டேன். ஆனால், சம்ஸ்கிருத முறையிலான வழிபாடுகளையும் கருவறை வரை சென்று இறை வழிபாடு செய்வதைத் தடுக்கும் முறைகளுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினேன். தமிழ் கடவுள்களாக 18 சித்தர்களையும் பூஜிக்க தொடங்கினேன். சிவன் தொடங்கி சித்தர்கள் வரை கருவறை வரை பக்தர்கள் சென்று வழிபடும் உரிமையை ஏற்படுத்த நினைத்தேன்.

அதுதான் உண்மையான வழிபாட்டு முறை. அதுதான் தமிழ் முறையிலான ஆன்மிகமாகப் பறைசாற்ற நினைத்தேன். அதற்காகத்தான், கரூர் வெண்ணைமலையில் சபரீசன் சித்தாசிரமத்தைத் தோற்றுவித்தேன். அதோடு, அங்கே 18 சித்தர்களுக்கும் சிலை அமைத்து, தமிழ்ச் சித்தர்கள் கோயிலை அமைத்துள்ளேன். அங்கே தமிழ் அன்னை, திருவள்ளுவர், வள்ளலாருக்கு சிலை அமைத்துள்ளேன். அதோடு, முழுக்க முழுக்க பாதரசத்தில் சிவலிங்கத்தை அமைத்துள்ளேன். இந்தப் பாதரசத்தால் ஆன சிவலிங்கத்தைப் பக்தர்கள் அனைவரும் அருகில் சென்று சிவலிங்கத்தைத் தொட்டு வழிபடலாம். இதுதான் நான் வளர்க்கும் தமிழ் ஆன்மிகம். இந்தத் தமிழ் ஆன்மிகம் எட்டுத் திக்கும் பரவ, அரும்பாடுபடுவேன்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: