தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

‘தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்’ என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச் சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கைப் பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கேரள மாநில மக்களின் துயர் துடைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், தி.மு.க சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழகத் தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருள்களையும் வழங்கி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை ‘கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக’ அளிப்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: