மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!

மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!

மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!

மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக கிடப்பதாக வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் அகதிகள் முகாமிற்கு சென்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அகதியாக தனது கணவருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற போது கடலோரக் பாதுகாப்பு குழும போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.இதன் பின் ஷோபனாவை மண்டபம் அகதிகள் முகாமிலும்,அவரது கணவரை திருச்சியில் உள்ள முகாமிலும் ஒப்படைத்துள்ளனர். முகாமில் தங்க வைக்கப்பட்ட இருவரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த நிலையில் அகதிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த உதவி தொகையான ரூ.1500, தினசரி வழங்கப்பட்டு வந்த உணவுப்படி ரூ.100 நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஷோபனா சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து 50 நாட்களாக இதே நிலை தொடர்ந்துள்ள நிலையில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களின் உதவியால் ஷோபனா அவ்வப்போது பசியாறி வந்துள்ளார்.

ஷோபனா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும்,உணவுப்படி நிறுத்தப்பட்டுள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழிக்கு வாட்ஸ் அப் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.இத்தகவலைப் பார்த்ததும் முதனமை நீதிபதி கயல்விழி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்,சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ராமலிங்கம் ஆகிய இருவரும் திடீரென மண்டபம் அகதிகள் முகாமிற்கு நேரில் சென்றனர். அங்கு அகதிகள் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அகதிகளிடம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்குப் பின்னர் தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப்படி ரூ.100 ஷோபனாவிற்கு தொடர்ந்து வழங்குமாறு மண்டபம் அகதிகள் முகாம் தனித்துணை ஆட்சியரை கேட்டுக் கொண்டார். இதனிடையே ஷோபனா சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற வழக்கு தொடர்பாக நாகர் கோயில் நீதிமன்றத்தில் இம்மாதம் 20-ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: