வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!
ரஞ்சன்குடி கோட்டையில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் தொல்லியல்துறை அதிகாரிகள். மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே காத்து வருகின்றது யாழ்ப்பாணம்!
முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிவடைந்திருந்தாலும் கூட அதையும் தாண்டி பல தொன்மையான அம்சங்களை இன்றும் யாழ். மண்ணில் காணக் கூடியதாகத்தான் உள்ளது. இவ்வாறு, யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் அமைச்சருக்காக கட்டப்பட்ட மாளிகையே… Read more
பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு; தமிழறிஞர்கள் அஞ்சலி!
பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞராக அறியப்பட்ட டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 1936-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் அறிவொளி. கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன்… Read more
`சிதறிக்கிடக்கும் பண்பாட்டு எச்சங்கள்’ – பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வு செய்ய கலெக்டரிடம் மனு!
பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வுக்கான பழம்பெரும் பண்பாட்டு எச்சங்கள் சிதறிக்கிடப்பதாகவும் அங்கே அகழாய்வு நடத்தி தமிழர் பாரம்பர்யத்தின் அடையாளங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காளையார்கோவில் சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு அளித்தார். அப்போது, இது குறித்து… Read more
கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் கு.முனியசாமி இப்பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றுத் தேடலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இம்மாணவர்கள்… Read more
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!
தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு… Read more
கீழடியில் அகழாய்வு பணி தீவிரம்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வு பணி தீவிரம் அடைந்துள்ளது.மதுரை அருகே உள்ள, கீழடியில், 2015ல், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, மூன்று கட்ட அகழாய்வு நடத்திய பின், அதை நிறுத்தியது. அகழாய்வு… Read more
தூத்துக்குடியில் 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சதிகல் கண்டுபிடிப்பு!
துாத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில், நாயக்கர் கால சதி கல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ளது சங்கம்பட்டி கிராமம். இங்கு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதிகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் போரில், வீர… Read more
1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்!
திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து… Read more
ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே ஓலக்கோடு என்ற இடத்தில் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏற்காடு… Read more