18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு வடிவத்தை கண்டுபிடித்தனர்.

சிறிய வட்டம் – அவர்கள் கூறியதாவது: ரோட்டோரத்தில் இந்தக்கல் உள்ளது. நான்கு கட்டங்களும், ஒரு முழுமை பெறாத கட்டமும் வரையப்பட்டு உள்ளது. மேல்பகுதியில், ஒரு சிறிய வட்டமும், இரண்டு, ‘எல்’ வடிவ கோடுகளும் உள்ளன. கட்டத்தினுள், 18-ம் நுாற்றாண்டின் தமிழ் எழுத்துகளை, முழுமையாக உருவாக்கும் வடிவங்களை வரைந்துள்ளனர். உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் உள்ளிட்ட, 247 எழுத்துகளையும் காண முடிகிறது.

அறிவுக் கூர்மை : ஒன்று முதல் பல கோடிகளுக்கு மேலாக, முடிவற்ற தமிழ் எண் உருக்களை உருவாக்குவது, கூடுதல் சிறப்பம்சம். எழுத்து, எண் உரு அமைப்பதில் சிரமம் தவிர்க்க, மேல் பகுதியில், மூன்று குறியீடுகளை அமைத்துள்ளனர். புராணகால அகத்தியர், கமண்டலத்தில் காவிரியை அடக்கியது போன்று, மிகச்சிறிய கட்டத்தில் எழுத்து, எண் உருக்களை அமைத்துள்ளனர். முன்னோர்களின் அறிவுக் கூர்மைக்கு, இது சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: