`சிதறிக்கிடக்கும் பண்பாட்டு எச்சங்கள்’ – பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வு செய்ய கலெக்டரிடம் மனு!

`சிதறிக்கிடக்கும் பண்பாட்டு எச்சங்கள்' - பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வு செய்ய கலெக்டரிடம் மனு!

`சிதறிக்கிடக்கும் பண்பாட்டு எச்சங்கள்’ – பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வு செய்ய கலெக்டரிடம் மனு!

பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வுக்கான பழம்பெரும் பண்பாட்டு எச்சங்கள் சிதறிக்கிடப்பதாகவும் அங்கே அகழாய்வு நடத்தி தமிழர் பாரம்பர்யத்தின் அடையாளங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காளையார்கோவில் சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு அளித்தார்.

அப்போது, இது குறித்து அவரிடம் பேசியபோது, “ஆதிச்சநல்லூர் அழகன்குளம் கீழடி அகழாய்வைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மறவமங்களம் அருகே பகையஞ்சான் கிராமத்தில் எங்கு பார்த்தாலும் பழந்தமிழர்கள் வீரத்தையும் கலாசாரத்தையும் வாழ்க்கை முறைகளையும் பறைசாற்றும் விதமாக நிலப்பரப்பின் மேல் பகுதிகளில் கறுப்பு சிவப்பு சாம்பல் வண்ண ஓடுகள், தடிமனான ஓடுகள், அதில் வரையப்பட்டுள்ள கோடுகள், சங்கு, பாசிமணிகள், இரும்பு, பித்தளை, கல்கோடாரி, நாணயங்கள், தானியங்களைச் சேமித்துப் பாதுகாக்கும் பெரிய குதிர்கள், உலோகத்தாலான காதணிகள், கல்மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கைவளையல்கள், சங்கால் செய்யப்பட்ட ஈட்டி போன்ற உடைந்த பாகங்கள், இன்னும் பல கைவினைப் பொருள்கள் பழம்பெரும் பண்பாட்டு எச்சங்களாக உடைந்து சிதறிக் கிடக்கின்றன. ஆங்காங்கே மணல் மேடுகள் இருக்கின்றன. அங்கே விளையாடும் சிறுவர்கள் கைகளில் பாசிகள், பானை ஓடுகள், இரும்பு, செம்பு போன்றவை கையில் எடுத்து சாதாரணமாக விளையாடுகிறார்கள். இந்தப் பகுதியில் மன்னன் வேங்கைமார்பன் வாழ்ந்து ஆட்சி செய்திருக்கிறார் என்கிறது வரலாறு. இந்தப் பகுதியை வரலாற்று ஆய்வுகள் தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கொண்டு இங்கே ஆய்வு நடத்தி உண்மையைத் தமிழர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக வைத்திருக்கிறோம்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: