ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!

ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!

ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!

ரஞ்சன்குடி கோட்டையில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் தொல்லியல்துறை அதிகாரிகள். மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான ரஞ்சன்குடி கோட்டையின் உட்புறம், 2 ஏக்கரில் பூங்கா அமைக்கும் பணிகளைத் தொல்லியல்துறை இன்று தொடங்கியது. இம்மாவட்டத்துக்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்ப்பது, ரஞ்சன் குடியிலுள்ள கோட்டையாகும். இது, கி.பி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் கட்டப்பட்டது. இதில், இன்றளவும் பிரதான நுழைவுவாயில், அகழிகள், விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடிமேடை, தண்டனைக் கிணறு, வெடி மருந்துக் கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பாண்டியர் காலத்து மண்டபம், முகமதியர் காலத்து மசூதிகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் துளைகளிடப்பட்ட சுற்றுச் சுவர், அந்தப்புற குளியலறைக் கிணறுகள் அனைத்தும் அழியாமல் இருக்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கோட்டைக்கான சீரமைப்புப் பணிகள், கோட்டையைக் காண வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில், சென்னையிலுள்ள தொல்லியல்துறை தலைமைக் கண்காணிப்பாளர், ரஞ்சன்குடிக் கோட்டையைப் பார்வையிட்டுப் பரிந்துரைத்த பிறகே சிறப்புக் குழுவினர் கோட்டையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்ட வரைவு தயாரித்து அனுப்பினர். அதன்படி, இரும்பு சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையல், இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறையின் பூங்கா அமைக்கும் பிரிவு கோட்டை வளாகத்திற்குள் 2 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கும் பணிகளை இன்று தொடங்குகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: