உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை - மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக இன்றோடு 66ம் ஆண்டு நிறைவுகிறது.

உலகத் தமிழர் பேரவை-யை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியவரான ஐயா முனைவர் திரு. இரா. சனார்த்தனம் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இன்றைய உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்களிடமும், அவரது உற்ற நண்பர்களிடத்தும் தொடர்ந்து பேரவை-யினை நடத்திட வேண்டும் என்ற பொறுப்புமிக்க ஆவாவினை ஒப்படைத்துச் சென்றார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அவரது மறைவுக்கு பின்னர் 2016ம் ஆண்டில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணத்தினை மேற்கொண்ட திரு. அக்னி அவர்கள், பல்வேறு தமிழ் நண்பர்களின் ஊக்கத்தினாலும், வேண்டுதலின் பின்பு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளராக 01-10-2016ம் தேதியன்று தமிழ் உலக சந்திப்பு ஒன்றை சென்னை அண்ணா சாலையில் உள்ள உமாபதி கலையரங்கத்தில், உலகத் தமிழர் பேரவை-யை மீள் பிறப்பெடுக்கப்பட்ட நிகழ்வு ஒன்று வெற்றிகரமாக நடந்தேறியது. பல வெளிநாட்டு, உள்நாட்டு தமிழறிஞர்கள், முன்னணி திரைத்துறையினர், தமிழக அரசியல் தலைமைகள், ஆன்மீக ஆன்றோர்கள் மற்றும் ஐயா முனைவர் திரு. இரா. சனார்த்தனம் அவர்களின் உற்ற நண்பர்கள் முன்னிலையில் அரங்கு நிறைந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

உலகத் தமிழர் பேரவை – கென முழு நேர பணியாட்களை கொண்டு, தமிழக தலைநகர் சென்னை அண்ணா சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்பு அலுவலகம் இயக்கப்பட்டு வருகிறது. பேரவைக்கென அலுவல்ரீதியான இணையதளம் அன்றாடம் செய்திகள் தாங்கி வருகிறது. இன்றைய நவீன, நாகரிக காலத்திற்கேட்ப பேரவையின் அங்கிகாரம் பெற்ற சமூக வலைதளங்களில் நாள்தோறும் தமிழர் சார்ந்த செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகத் தமிழர்களை சென்றடைகிறது.

தமிழ் மொழி, இனம் சார்ந்த கள நிகழ்வுகள் பலவும், அரசுக்கு துறைகளுக்கு அழுத்தங்களும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழக பொறுப்பு ஆளுநர் டாக்டர் வித்யாசாகர் ராவ் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமிகு. கிரண் பேடி அவர்களை நேரில் சந்தித்து உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு ஆளுநர் மாளிகையில் சிலை ஒன்றை நிறுவ வேண்டி வேண்டுகோள் வைக்கப்பட்டு, அதில் தமிழகத்தில் வெற்றியும் பெற்றுள்ளதை பெருமையோடு நினைவு கூறுகிறோம்.

ஆம், உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றிகரமான இன்றோடு ஒரு ஆண்டு நிறைவுகிறது.

மீள் பிறப்பின் ஓராண்டு நினைவை முன்னிட்டு, விரைவில் “தமிழ் உலகம்” என்ற அவ்வப்போது வெளிவரும் இதழ் ஒன்றை அச்சிலும் மற்றும் டிஜிட்டலிலும் இம்மாதம் வெளிவர கொண்டு வர உள்ளதை இந்த நேரத்தில் பகிர்கிறோம். இந்த இதழ் தேவைப்படுவோர் எமது அலுவலகத்தை நேரிலோ, இணையம் வழியோ, மின்னஞ்சல், whatsApp, தொலைப்பேசி மற்றும் நண்பர் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

உலகத் தமிழர்களின் பேரதரவோடு வெற்றி நடைபோட்டு வரும் எங்களுடன் இணைந்து பயணிக்க அன்போடு அழைக்கிறோம். அனைத்து வித ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் உங்களிடமிருந்து எதிர்பார்த்து முன்னோக்கி நகர்ந்து வருகிறது, உலகத் தமிழர் பேரவை!

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: