உலகத் தமிழர் பேரவை – யை நிறுவி, உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து வந்தவர் முனைவர் திரு. இரா.சனார்த்தனம்!

65 ஆண்டுகளுக்கு முன்பே உலகத் தமிழர் பேரவை – யை நிறுவி, உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து வந்தவர் முனைவர் திரு. இரா.சனார்த்தனம்!
உலகத் தமிழர் பேரவை - யை நிறுவி, உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து வந்தவர் முனைவர் திரு. இரா.சனார்த்தனம்!

உலகத் தமிழர் பேரவை – யை நிறுவி, உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து வந்தவர் முனைவர் திரு. இரா.சனார்த்தனம்!

உலகத் தமிழர் பேரவை – யை ஆரம்பித்த நிறுவனர் ஐயா முனைவர் திரு. இரா.சனார்த்தனம்  எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள். அவரை அவரது உலக நண்பர்கள் “ஜனா” என்றே அன்போடு அழைத்து வந்துள்ளனர்.

ஐயா முனைவர் திரு. இரா.சனார்த்தனம் தனது மாணவர் காலம் தொட்டே தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளை தொடர்ச்சியாக,  தனது இறுதிக் காலம் வரை செய்து வந்தவர்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களின் சார்பில் ஜனநாயகப் பாதுகாப்பு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டுக்கு அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். தமிழக மாணவர்கள் தலைவராக இருந்துள்ளார். உலகத் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் தலைவராக இருந்து நடத்தி வந்தார். கோவையில் பட்டதாரி தொகுதித் தேர்தலில் நின்று பெருவாரியான ஓட்டு பெற்று வெற்றி பெற்று, எம்.எல்.சி. -ஆக பதவி வகித்துள்ளார்.
1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கு பெற்று சிறை சென்றவர். திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீர சிவாஜியாக நடித்து மேடைகளில் தனது நடிப்பு திறனையும் காட்டி வந்தார்.
1972-ல் தமிழகத்தில் அறிஞர் அண்ணா-வின் வீட்டின் முன்புறம் எடுத்த புகைப்படம்.  படத்தில் (இ-வ) எ. அமிர்தலிங்கம், எம். மங்கையர்கரசி அமிர்தலிங்கம், எஸ்.ஜெ.வி. செல்வநாயகம், முனைவர் இரா.சனார்த்தனம், ஏ.எஸ். மணவைத்தம்பி மற்றும் கோவை மகேசன்.

1972-ல் தமிழகத்தில் அறிஞர் அண்ணா-வின் வீட்டின் முன்புறம் எடுத்த புகைப்படம்.
படத்தில் (இ-வ) எ. அமிர்தலிங்கம், எம். மங்கையர்கரசி அமிர்தலிங்கம், எஸ்.ஜெ.வி. செல்வநாயகம், முனைவர் இரா.சனார்த்தனம், ஏ.எஸ். மணவைத்தம்பி மற்றும் கோவை மகேசன்.

ஐயா முனைவர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் பெரும்பாலும் இலங்கையில் பெரும்பகுதி தமிழர்களை வைத்துள்ள ஈழத்திற்கு பலமுறை பயணித்தவர். அங்கிருந்த அனைத்து தமிழ் தலைவர்களையும் நெருக்கமாக அறிந்தவர். குறிப்பாக ஈழத்தின் தந்தை செல்வா அவர்களோடு நெருங்கிப் பழகியதுடன், அன்னாரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத்தமிழர்களுக்காகப் பல கூட்டங்களை தமிழகத்தில் நடத்தினார். மிதவாத தலைவர்கள் முதல் ஆயுதப் போராட்ட போராளிகள் வரை அனைவரையும் மிக நெருக்கமாக அறிந்திருந்தவர். அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழக மக்களிடமும், தமிழக அரசியல் தலைமைகளிடம் முதலில் அறிமுகம் செய்தவர் என்ற பெருமைக்குரியர் வேறு யாரும் இருந்திருக்க முடியாது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிராபாகரன் உள்ளிட்ட பல தமிழ் போராளிகளை தமிழகத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்து தமிழக தமிழர்களிடம் அடையாளம் காட்டியவர். இவரது சென்னை இல்லத்தில் தான் நேதாஜியின் படத்துக்கு மாலை அணிவித்து கும்பிட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை தேசிய தலைவர் பிராபாகரன் துவக்கினார்.
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், காவல் துறையினருக்கும் தமிழ் மக்களுக்கும் மோதல் ஏற்பட, அதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலும் மின்சாரம் தாக்கியும் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு, ஈழத்தமிழர் ஆரம்பகட்ட போராட்டங்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 9 தமிழர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு எதிரில் நினைவு தூண்கள் அமைக்கப்பட்டு ஈழ மக்கள் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருவதை காணக் கூடியதாகும்.
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் (1974 -யாழ்ப்பாணம்) தடையை மீறி இரா.சனார்த்தனம் அவர்கள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், காவல் துறையினருக்கும் தமிழ் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சூட்டிலும் மின்சாரம் தாக்கியும் 9 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக யாழ்ப்பாணத்தில் உள்ள நினைவு சின்னம்.

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் (1974 -யாழ்ப்பாணம்) தடையை மீறி இரா.சனார்த்தனம் அவர்கள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், காவல் துறையினருக்கும் தமிழ் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சூட்டிலும் மின்சாரம் தாக்கியும் 9 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக யாழ்ப்பாணத்தில் உள்ள நினைவு சின்னம்.

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு, இலங்கைத் தமிழருக்காக தோழர் பத்மநாபா நடைபயணம் மேற்கொண்டு சென்னை வந்தபோது, அடையாறு பாலத்தருகே எந்த அறிவிப்பும் இன்றி  திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் அங்கு வந்து கட்டி அணைத்துப் பாசத்தைப் பொழிந்த அந்த நாட்கள், என்று தோழர் பத்மநாபாவால் நினைவு கூறப்பட்டவர்.

தங்கதுரையும், குட்டிமணியும்,  பெரியஜோதியுடன் சென்னைக்கு வந்த போது,  அங்கே உலகத் தமிழர் பேரவை-யின் அன்றைய தலைவர் இரா.சனார்த்தனம் அவர்களின் உதவியோடு, கோடம்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை  வாடகைக்குப் பிடித்து கொடுக்க உதவியவர்.
இப்படி பல்வேறு வகைகளில் ஈழத்தமிழர்களோடு பின்னி, பிணைந்து கொண்ட  ஐயா முனைவர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள், ஈழத்து வரலாற்றில் நீக்க முடியாதவராக இருந்து வருபவர்.
நெருக்கடி காரணமாக திராவிட சிந்தனை கொண்டிருந்த போதிலும், தமிழ் தேசியம் குறித்து திரு. இரா.சனார்த்தனம் அவர்களுக்கு உள்ளூணர்வு அதிகம் இருந்து வந்த போதுதான், அவர் 1998 ஆண்டுகளில் தினமணியின் அறிக்கை மூலம் “தமிழ் தேசியம்” குறித்த கட்டுரைகளை தமிழர்களிடம் கேட்டு பதிப்பித்தார்.
உலக அளவில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தமிழர்களோடு பழகியது அவரையும் அறியாமலேயே ஒரு இணைப்பு பாலத்தை உருவாக்கி வந்தவர். அதனால் அவருக்கு பெரும்பாலான நாடுகளில் தமிழர் நண்பர்கள் இருந்து வந்தனர். இதனால், ஐயா முனைவர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போதெல்லாம், அவரை வைத்து சில பொது நிகழ்ச்சிகளை அங்கிருந்த தமிழர்கள் நடத்தினர். அதுபோலவே, புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள், தமிழகத்திற்கு அழைத்து சென்னையில் விழா எடுத்து தமிழர்களை ஒன்றிணைப்பதை நேர்மையாக எந்தவித பலனையும் எதிர்பார்க்காது இறுதி வரை செய்து வந்தார் என்றால் மிகையிருக்காது.
மிகுந்த தமிழ் ஆர்வலரும், உலகத் தமிழர் பேரவை-யை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியரான ஐயா முனைவர் திரு. இரா. சனார்த்தனம் 20.02.2013 அன்று,  சென்னையில் காலமானார். அன்னாரது உடல் நம்மிடமிருந்து மறைந்தாலும், அவரது தமிழர் சார்ந்த செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உலகத் தமிழர் பேரவை – யை ஆரம்பித்த நிறுவனர் ஐயா முனைவர் திரு. இரா.சனார்த்தனம்  அவர்கள் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இன்றைய உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்களிடமும், அவரது உற்ற நண்பர்களிடத்தும் தொடர்ந்து பேரவை-யினை நடத்திட வேண்டும் என்ற பொறுப்புமிக்க ஆவாவினை ஒப்படைத்துச் சென்றார். அவரது மறைவுக்கு பின்னர் 2016ம் ஆண்டில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணத்தினை மேற்கொண்ட திரு. அக்னி அவர்கள், தமிழ் நண்பர்களின் ஊக்கத்தினாலும், வேண்டுதலின் பின்பு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளராக 01-10-2016ம் தேதியன்று தமிழ் உலக சந்திப்பு ஒன்றை சென்னை அண்ணா சாலையில் உள்ள உமாபதி கலையரங்கத்தில், உலகத் தமிழர் பேரவை-யை மீள் பிறப்பெடுக்கப்பட்ட நிகழ்வு ஒன்று வெற்றிகரமாக நடந்தேறியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு, உள்நாட்டு தமிழறிஞர்கள், முன்னணி திரைத்துறையினர், தமிழக அரசியல் தலைமைகள், ஆன்மீக ஆன்றோர்கள் மற்றும் ஐயா முனைவர் திரு. இரா. சனார்த்தனம் அவர்களின் உற்ற நண்பர்கள் முன்னிலையில் தமிழ் பேரறிஞர்களின் வாழத்தோடும் அரங்கு நிறைந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனையடுத்து, உலகத் தமிழர் பேரவை – கென முழு நேர பணியாட்களை கொண்டு, தமிழக தலைநகர் சென்னை அண்ணா சாலையில் தொடர்பு அலுவலகம் இயக்கப்பட்டு வருகிறது. பேரவைக்கென அலுவல்ரீதியான இணையதளம் அன்றாடம் செய்திகள் தாங்கி வருகிறது. இன்றைய நவீன, நாகரிக காலத்திற்கேட்ப பேரவையின் அங்கிகாரம் பெற்ற சமூக வலைதளங்களில் (முகநூல், டீவிட்டர், கட்செவி) நாள்தோறும் தமிழர் சார்ந்த செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகத் தமிழர்களை சென்றடைகிறது.
ஐயா முனைவர் இரா.சனார்த்தனம் அவர்களது நெருங்கிய நண்பர்கள் உலகு முழுக்க பரந்து இருந்தாலும், அவர்கள் அனைவரையும் நமது உலகத் தமிழர் பேரவை – யால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்படியான நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு ஊக்கமளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
 – அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை (www.worldtamilforum.com or Vorldtamilforum@gmail.com)

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: