‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு!

'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு!

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு!

சென்ற சனிக்கிழமை (01-10-2016) அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலக சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை சேர்ந்த தமிழ் தேசத்து பற்றாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர். உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு . அக்னி அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.

கூட்ட ஆரம்பத்தில். உலகத் தமிழர் பேரவையின் நிறுவனரான காலம் சென்ற அய்யா முனைவர் திரு. ஜனார்தனன் அவர்களது திரு உருவப் படத்தை அவரது மிக நெரருங்கிய நண்பர்களான எழுத்தாளர் திரு. குணசேகரன்., பாரத் பல்கலைக்கழக துணை இயக்குநர் திரு. தியாகு., தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் மகள் திருமிகு மணிமேகலை கண்ணன் மற்றும் கனடாவில் இருந்து வந்திருந்த அய்யா திரு. தங்கவேலு வேலுப்பிள்ளை படத்தினை திறந்த வைத்தனர்.

பின்னர் விழா தொடங்கியது.

world-tamil-forum-meet-6

கனடாவில் இருந்து வந்திருந்த ஈழத்தை பிறப்பிடமாக கொண்டிருந்த அய்யா திரு. தங்கவேலு வேலுப்பிள்ளை அவர்கள் தமிழர்கள் அனைவரும் வீட்டில் கட்டாயம் நல்ல தமிழில் பேச வேண்டும். தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசக் கூடாது. அப்போது தான் தமிழ் அடுத்த தலைமுறைக்கும் வாழும் என்பதை சுட்டிக் காட்டினார். மேலும் அயலகத்தில் உள்ள தமிழர்களிடம் தமிழை வளர்க்க தமிழக அரசு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

world-tamil-forum-meet-3

சிங்கப்பூரிலிருந்தது வந்திருந்த அய்யா திரு. அ.வை.கிருஷ்ணசாமி, தற்போது தமிழை ஆட்சி மொழியாக கொண்டிருக்கும் எங்களது நாட்டைப்போல், பழங்கால தமிழர்கள் கவனமாக இருந்திருந்தால், உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்தான் ஆட்சி இருந்திருக்கும் என்றார்.

world-tamil-forum-meet-2 world-tamil-forum-meet-10

மூத்த தமிழ் பற்றாளர் திரு குமரி ஆனந்தன் அவர்கள் பேசும்போது, ‘1978 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் நான் தமிழில் பேசினேன். அப்போது அங்கிருந்த இந்தி உறுப்பினர்கள் ‘முட்டாளே இருக்கையில் அமர் , தமிழில் பேசாதே’ என்றார்கள். நான் முட்டாள் அல்ல தமிழில் தான் பேசுவேன் என்றேன். அது தொடங்கி பாராளுமன்றத்தில் தமிழில் தான் பேசி வந்தேன். பாராளுமன்றத்தில் தமிழில் பேசலாம் என்ற உரிமையை நான் நிலைநாட்டினேன்.

ஆனால் அதன் பிறகு தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பேசுவதை இது வரை தவிர்த்தே வந்துள்ளனர். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள நாற்பது உறுப்பினர்கள் ஒருவர் கூட தமிழில் பேசுவதில்லை என்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. பாடுபட்டு வாங்கிய உரிமையை கூட தமிழகத்து அரசியல்வாதிகள் பாதுகாக்க முன்வரவில்லை’, என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

world-tamil-forum-meet-8

இந்திய மும்பையிலிருந்தது வெளிவரும், தமிழ் லெமுரியாவின் ஆசிரியர் திரு. குமுண ராசா அவர்கள், உலகத் தமிழர் பேரவையை உலகு முழுக்க எடுத்தது செல்லப்பட வேண்டும். அதற்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்போம் என்றார்.

world-tamil-forum-meet-7

ஆந்திரா ஐத்ராபாத்திலிருந்த வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் திரு. சுபாஸ் சந்திரன், இந்நிகழ்ச்சியை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரவைக்கு நன்கொடுடையாக ரூபாய் பத்தாயிரத்தை வழங்கி சிறப்பித்தார்.

world-tamil-forum-meet-4

எழுகதிர் ஆசிரியர் திரு அருகோ அவர்கள், தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலராமல் தமிழ் நாட்டில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் உயரவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். திராவிட ஆட்சியில் தான் தமிழ் வழிக் கல்விக்கு மூடுவிழா காணப்பட்டது. அதனாலேயே தமிழ் மொழியின் வளர்ச்சி தடைபட்டது என்பது வருத்தத்துடன் தெரிவித்தார். ஈழத்தில் தமிழர்கள் உரிமையுடன் வாழவும் தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலர வேண்டும் என்றும் கூறினார்.

world-tamil-forum-meet-11

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, தமிழர்கள் சாதியாலும், மதத்திலும் பிரிந்து கிடக்காமல் தமிழர் என்ற உணர்வுடன் ஒற்றுமையுடன் இருந்தால் தமிழர்களை யாரும் எளிதில் தாக்க முடியாது . பிரிந்து நின்றால் யார் வேண்டுமானாலும் தமிழர்களை தாக்க முற்படலாம் என்பதை விளக்கினார்.

world-tamil-forum-meet-12

தமிழர்களின் கோரிக்கைகள், கருத்துக்கள் சட்டமன்றத்தில் எதிரொலிக்க எப்போதும் தமிழக சட்டமன்றத்தில் தமிழர் குரலாக ஒலிப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி கூறினார்.

தமிழ் உலக சந்திப்பில் தமிழ் தேசத்தவர்கள். மதமோ சாதியோ தமிழர்களை பிரிக்க முடியாது என உறுதி செய்த நிகழ்வு ஒன்றறு அனைவரின் மனத் தொட்ட ஒரு நிகழ்வை குறிப்பிடலாம். இசுலாமிய தமிழர் திரு, தமிமுன் அன்சாரி, தமிழர் மத தலைவர் பேரூர் ஆதீனம் திரு. மருதாசல அடிகளார் ஒருவருக்கு ஒருவர் தங்கள் தமிழ் பற்றை வெளிப்படுத்தி தழுவி கொண்டனர். இது தமிழகத்தில் தமிழர்கள் மதமாக சாதியாக பிரிந்து தான் இருக்க வேண்டும் என திராவிட மதவாதிகளும் நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திருந்த வேண்டும் என்பதற்கே தமிழ் உலக சந்திப்பு நடந்த இந்நிகழ்வால், சாதியோ மதமோ தமிழர்களை இனி பிரிக்க முடியாது என்பதை உலககுக்கு பறைசாட்டியது. ஆம், தமிழர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.

world-tamil-forum-meet-15

world-tamil-forum-meet-6 world-tamil-forum-meet-9

world-tamil-forum-meet-13 world-tamil-forum-meet-14 world-tamil-forum-meet-16 world-tamil-forum-meet-17நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் தமிழகத்தில் தமிழர் ஆட்சி, தமிழ் மொழியை எங்கும் எதிலும் பயன்படுத்துவது, தமிழர்கள் சாதி,மதம் அரசியல் கருத்தியல் முதலானவற்றால் பிரிந்து நிற்காமல் பிற தேசிய இனத்தவர்கள் போல ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

அடுத்தடுத்து வரும் தமிழ் உலக சந்திப்பில் மேலும் பல தமிழர் சார்ந்த புதிய திட்டங்கள் முன்வைத்து செயல்படுத்தப்படும் என்பதை உலகத்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி அவர்கள் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள் இந்நிகழ்வில், புலவர் கி.த.பச்சயப்பனார் (ஒருங்கிணைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு), ஒவியர் சந்தானம், தமிழறிஞர் திருவள்ளுவர் இலக்குவனார், திரு. தங்கர் பச்சான் (திரைப்பட இயக்குநர்), திரு. வீ.சேகர் (திரைப்பட இயக்குநர்), திருமிகு மணிமேகலை கண்ணன் – தமிழக புலவர் குழுவின் தலைவர் (தமிழறிஞர் -கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் மகள்), வழக்குரைஞர் சக்திவேல் (தலைவர், மக்கள் மாநாட்டுக் கட்சி), திரு. இரா.சொ.ராமசாமி (தலைவர், கோவை முத்தமிழ் அரங்கம்), திரு. குணசேகர், கோவை (எழுத்தாளர்), திரு. தியாகு(துணை இயக்குநர், பாரத் பல்கலைக்கழகம்), புலவர் இரத்தினவேல், புதுச்சேரி, புலவர் காளியப்பன், கோவை, திரு. புது தமிழ் உலகன், புதுச்சேரி, திரு. நமச்சிவாயம், மதுரை, திரு. ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை, வழக்குரைஞர் சிகரம் செந்தில் நாதன், திரு. அதியமான் (தலைவர், தமிழர் முன்னேற்ற சங்கம்), திரு. ராஜ்குமார் பழனிசாமி (தமிழர் பண்பாட்டு நடுவம்), திரு. வெற்றி (தலைவர், இந்திய சுதந்திர கட்சி) என பல்வேறு துறைகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர். தமிழ் ஆர்வலர்கள் திரு. வடிவேல் முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்தது வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு துணை நின்று உடன் பயணித்த உலகத்தமிழர் பேரவையின் பொறுப்பாளர்கள், திரு. கோபி. நாராயணன் யாதவ், சென்னை (பட்டைய கணக்கர்), திரு. உல்லாச குமார், வெங்காளூர் (பெரு வணிகர்) ஆகியோருக்கு நிகழ்வில் மரியாதை செய்யப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியில், பின்வரும் செயல்பாடுகளால்,

– உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது.
– தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளை மேம்படுத்தி பாதுகாப்பது.
– அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
– உலகளவில் நிகழக் கூடிய மனித நேய செயல்பாடுகளில் இணைந்து கொள்வது.

world-tamil-forum-meet-5

போன்ற தீர்மானங்களை கொண்டு, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்கிட அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் உலகத்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி அவர்கள் சொல்லி, அரங்க நிறைந்திந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி நிகழ்வினை முடித்த வைத்தார்.

world-tamil-forum-discussion-1 world-tamil-forum-discussion-2 world-tamil-forum-discussion-3

அரங்க கூட்டத்திற்கு முன்னதாக உலகத்தமிழர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் முக்கிய பங்காளர்களை கொண்டு நடைபெற்றது. இதில் வருங்காலத்தை மனதிற் கொண்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

நிகழ்ச்சி செய்தி தொகுப்பு : இராஜ்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாடு நடுவம்

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. Pingback: Doraisamy Lakshamanan

  2. Pingback: Doraisamy Lakshamanan

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: