ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநர் திருமிகு. கிரண் பேடி - யிடம் நேரில் வலியுறுத்தல்!

ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநர் திருமிகு. கிரண் பேடி – யிடம் நேரில் வலியுறுத்தல்!

புதுச்சேரி-யில் பெரும்பான்மை தமிழர்கள் இருந்தாலும், தமிழகத்தோடு இணையாமல், இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு மாநில நிலையிலேயே இன்று வரை இருந்து வருகிறது. சுதந்திர இந்தியாவிற்காக இந்தியர்கள் அன்று பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு முறைகளில் போராடிய போதும், பிரான்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரி (அன்று பாண்டிச்சேரி) – யில் உள்ள மக்கள் பிரான்சு நாட்டோடு நற்புறவை பேணி வந்தனர். சுதந்திர இந்தியாவோடு பல்வேறு சமஸ்தானங்கள் இணைய முற்பட்ட போதும், புதுச்சேரி மக்கள் இந்தியாவோடு இணைய மறுத்தும் வந்தனர். பின்னர் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே இந்திய நாட்டோடு இணைய வேண்டிய கட்டாயமானது. பல்வேறு சூழல்கள் மாறி இருப்பினும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த புதுவை மண்ணின் தமிழர்கள் தனித் தன்மையோடு விளங்கி வருவது குறிப்பிடத் தக்கது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதன்மைப் பணியோடு, தமிழ் மொழி, தமிழ் இனம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் அக்கரையோடு நகர்த்தி வருகிறது.

உலகப் பொதுமறை தந்த, ஐயன் திருவள்ளுவரையும், திருக்குறளையும் உலகம் முழுக்க பரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தின் முதன்மையானவர் என அரசால் அடையாளம் காட்டப்படுபவர் தமிழக அளுநர். அவரது அலுவலகமும், மாளிகையும் அமைந்துள்ள இடத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை ஒன்றை திறக்க வேண்டும் என்று நமது உலகத் தமிழர் பேரவை கோரிக்கை வைத்த போது, அதை உடனடியாக நிறைவேற்றியது, அனைத்து தரப்பு தமிழர்களிடத்திலும் நன் மதிப்பை பெற்றுக் கொடுத்தது.

தமிழக உறவுகளின் ஒரு அங்கமாக திகழும், புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் ஐயன் திருவள்ளுவர் சிலை ஒன்றை நிறுவிட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையோடு, நேற்று (28.07.2017) மாலை புதுச்சேரி ஆளுநர் திருமிகு. கிரண் பேடி அவர்களை உலகத் தமிழர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் தலைமையில் சந்தித்து உலகத் தமிழர் பேரவையின் கோரிக்கையை முன் வைக்கப்பட்டது.

முன்னதாக கிரண் பேடி அவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் சிலை ஒன்றை பரிசாக அக்னி அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட உடனேயே, தனது அலுவலக மேசையின் மீது வைத்து அழகு பார்த்தார் புதுவை ஆளுநர். அக்னியோடு வந்திருந்த நண்பர்கள், ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தினர்.

இந்த சந்திப்பின்போது, திரு. அக்னி அவர்களுடன், பேரவையின் நண்பர்கள் உடனிருந்தனர்:

1. பாவலர் இராமசந்திரன், தமிழ் தன்னுரிமை இயக்கம்
2. கோவை புலவர் காளியப்பனார் (உலகத் தமிழர் பேரவை – கோவை)
3. திரு. இரவி (உலகத் தமிழர் பேரவை)
4. திரு. அணு (உலகத் தமிழர் பேரவை – கணனி தொழில் நுட்ப பிரிவு)
5. செல்வி வாசுகி (உலகத் தமிழர் பேரவை – சென்னை பொறுப்பாளர்)

இக்கோரிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, தனது அடுத்த அலுவலக சந்திப்பின் போது இது குறித்து முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அந்த உறுதியினை விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: