தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்
உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை… Read more
நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையில் சார்ப்பில் புகழஞ்சலி!
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் சென்னையில் புகழ் பெற்ற மாநில (பிரசிடென்ஸி – Presidency College) கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். வழக்குரைஞர் பட்டத்தினை சென்னை பல்கலைக்கழகத்தில்… Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘மாவீரர் தினம்’ நிகழ்ச்சி மேற்கொள்ள தடை!
1982-ம் ஆண்டு அக்டோபர் 27-ல், இலங்கை சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையிலான விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். மினி பேரூந்தில் வந்த சங்கர், புலேந்திரன், ரகு, மாத்தையா, சந்தோஷம் உள்ளிட்ட 8 விடுதலை புலிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 15… Read more
இலங்கை தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி!
இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷே ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த முக்கிய அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி… Read more
இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து!
இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அதிபராக பதவி ஏற்ற அவர், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் கோத்தபய. 2 தமிழர்கள்… Read more
‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை கோரிய உலகத் தமிழர் பேரவை – யின் விண்ணப்பத்தை ஏற்று, முதலமைச்சரின் தனிப் பிரிவு, சென்னை காவல்துறையின் விசாரணைக்கு அனுப்பியுள்ளது!
உலகத் தமிழர் பேரவை, சென்ற 09-08-2019 தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு ‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை கோரிய விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட தனிப் பிரிவு, இன்று அவ்விண்ணப்பத்தை சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய திரைப்பட… Read more
மலேசியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில்… Read more
கலையூர், பாம்பு விழுந்தான் – பரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி, சுடுமண் உறைகிணறு, பல் கண்டெடுப்பு!
பரமக்குடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, மனித பல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கீழடியை போன்று இங்கும் அகழாய்வு பணிகளை செய்யவேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் ஊரணியை,… Read more
பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் திரு. சுதிஸ் வர்மாவோடு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் (BJP- Media Spokesperson) திரு. சுதிஸ் வர்மாவோடு டெல்லியில் உள்ள பி.ஜே.பி. மத்திய தலைமை அலுவலகத்தில் அவரது அறையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்த வேளையில் (23-09-2019), பி.ஜே.பி-யின்… Read more
ஈழத் தமிழர்களுக்கு சுண்ணாம்பு! காஷ்மீர் மக்களுக்கு வெண்ணையா? டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்!
இன்று (22.08.2019) டெல்லியில் திமுக தலைமையில் முன்னெடுக்கப்பட்டு, 14 கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் காஷ்மீருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுவாக, இன்றைய மத்திய அரசு அன்மையில் எடுக்கப்பட்ட காஷ்மீர் நிலையை நமது உலகத் தமிழர் பேரவை கண்டிப்பதோடு,… Read more