உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகை அறுவடை திருநாளாகவும், புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்த கொண்டாடத்தின்போது நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக கூடி சக்கரை பொங்கல் செய்து, அந்த ஆண்டின் அறுவடைக்கு நன்றி செலுத்துவர். கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இதன்மூலம் கனடாவில் உள்ள தமிழர்கள் நம் நாட்டின் வெற்றி மற்றும் செழுமைக்காக ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்போம்.” என்று தெரிவித்தார்.

”எங்கள் குடும்பத்தின் சார்பாக சோஃபியும் நானும் தை பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று கூறி தன் உரையை முடித்துக்கொண்டார் ஜஸ்டின்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: