பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் திரு. சுதிஸ் வர்மாவோடு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் (BJP- Media Spokesperson) திரு. சுதிஸ் வர்மாவோடு டெல்லியில் உள்ள பி.ஜே.பி. மத்திய தலைமை அலுவலகத்தில் அவரது அறையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்த வேளையில் (23-09-2019), பி.ஜே.பி-யின் பல தரப்பட்ட தமிழர் தரப்பு முரண்களை திறந்த மனதோடான கேள்விக் கணைகளுக்கு பதிலாளித்தார். பி.ஜே.பி.யின் கொள்கை ரீதியான தமிழர் நிலை என அனைத்து தரப்பிலும் தெளிவான பதிலை வைத்திருப்பது எமக்கு ஆச்சரித்தை அளித்தது. அதில் முரண்கள் இல்லை என்பதே விளக்கமாகும். ஊடகங்களும், எதிர்க்கட்சிகளுமே குழப்பங்களுக்கு காரணமாக இருப்பது அறிய முடிகிறது.

பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் (BJP- Media Spokesperson) திரு. சுதிஸ் வர்மா, முன்பு NewX – ன் மேனாள் ஆசிரியர் பிரிவு தலைவராவார். பிரிட்டிஷ் தூதரகத்தின் செய்தி பகுப்பாய்வு பிரிவின் தலைவராக உயர்பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதையெல்லாம் எறிந்து விட்டு, பி.ஜே.பி-யின் முழு நேர BJP- Media Spokesperson செயல்பாட்டாளராக உயர்பதவி வகிக்கிறார். இவரை நாம் ஆங்கில மற்றும் இந்தி காட்சி செய்தி ஊடக கலந்துரையாடல்களில் பார்க்கலாம்.

மேலும் அவர் “மோடி ஜி” என்ற தலைப்பில் மிகப் பெரிய நூல் ஒன்றை ஆங்கில மற்றும் இந்தியிலும் வெளியிட்டுள்ளார். தமிழில் அந்த நூல் வெளிவர வேண்டும் என ஆசைப்படுகிறார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: