தமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்!

தமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்!

தமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்!

அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஓ. பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்றார். மேலும் அமைச்சர்களின் சில துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற பின்பு நேராக தலைமை செயலகத்துக்கு வந்த துணை முதல்வர் திரு. ஓ.பி.எஸ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதையடுத்து தமிழக முதல்வராக உள்ள திரு. எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இதை தொடர்ந்து தமிழக அமைச்சரவை சகாக்களும் பொன்னாடை போர்த்தி துணை முதல்வரை வாழ்த்தினர்.

பதவியேற்ற துணை முதல்வர் அவர்களுக்கு இந்திய தலைமை அமைச்சர் திரு. நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: