கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுது. கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் இன்று (13.10.2019) நிறைவுபெறுவதாக தொல்லியல் துறை அதிகாரிகளும், தமிழக தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியில் சுற்றியுள்ள பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி வரும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது அல்லது 3வது வாரத்தில் தொடங்கலாம் என்று தெரிகிறது. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் இறுதி நாளான இன்று அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இடத்தை தொல்

லியல் ஆர்வலர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் திரளாக வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், பொதுமக்கள் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்ற 52 குழிகளையும் இனி பார்வையிட முடியாது. புவிகாந்த புலவிசை உள்ளிட்ட பல்வேறு நவீன முறைகள் மூலம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி கொந்தகை, பள்ளிச்சந்தைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான பழமையான சான்றுகள் கிடைத்தது.

எந்த ஒரு ஜாதி, மத அடையாளங்களிலும் தழுவாமல் கீழடியில் சான்றுகள் கிடைத்ததை உலகத் தமிழர்கள் வரவேற்றனர். இந்த அகழாய்வுப் பணியில் கிடைத்த பொருட்களையும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்தாம் கட்ட கள ஆய்வு முடிவு பெற்றாலும் ஆய்வகங்களில் நடக்கக்கூடிய அகழாய்வின் தொடர்ச்சி ஆய்வுகள் நடைபெறும். கீழடியில் கிடைத்த எலும்புகள் புனே மற்றும் கேரளாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உள்ளன. பானை ஓட்டு பகுப்பாய்வு, உலோக மாதிரி ஆய்வுகள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: