ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் படித்து பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் 200க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நீர்ப்பாசனம் தொடர்பான கல்வெட்டுகளாக இடம் பெற்றுள்ளன. இதுவரை 30க்கும் மேற்பட்ட குமிழி மடைகளில் நீர்ப்பாசனம், மடை மற்றும் விளை நிலங்கள் தொடர்பான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பொதுவாக மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடி வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் ஆறுகள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன. எனினும் அதிகப்படியான குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் சங்கிலித் தொடராய் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கடலில் கலக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது. கல்வெட்டில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு நீர்ப்பாசனத்தால் பயனடைந்த நிலங்கள் எவை என தெரிந்து கொள்ள முடிகிறது. சேந்தங்குடி பெரியாத்தாள் குளத்தில் இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது இடும்பன் குளம் என்று பெயரிடப்பட்டிருந்தது. குளத்துக்கு அம்புலியாற்றிலிருந்து வெளி வரும் உபரி நீரை அன்னதான காவிரி எனும் வழி ஏற்படுத்தி அதிலிருந்து வந்தடைந்த நீர் பாசன நிலங்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த மடை அமையப் பெற்றுள்ளது.

இதில் கொள்ளளவு எட்டிய காலங்களில் அடுத்தடுத்த குளங்களுக்கு சங்கிலித் தொடராய் சென்று குலமங்கலத்திற்கு அருகே செல்லும் வில்லுணி ஆற்றுடன் இணைகிறது. கல்வெட்டு கண்டறியப்பட்ட குமிழி மடை நான்கு மடைகளைக் கொண்டுள்ள இந்த ஊருணியில் முதல் மடையில் உள்ளது. இதிலிருந்து வெளி வரும் நீர் குளத்தின் வடக்கே உள்ள விளை நிலங்களுக்கு பாயும் வகையில் அமைந்துள்ளது.

சாலிவாகன சகாப்த ஆண்டாக 1730-ம் கலியுக ஆண்டாக 4909-ம் விபவ வருசம் ஆடி மாதம் 23ம் தேதி சுக்கிர வாரம் உத்திராட நட்சத்திரத்தில் கூடிய சுபதினத்தில் தனுசு லக்கனத்தில் தென்சோரை வளநாட்டிற்கு உட்பட்ட தென்தானவ நாட்டை சேர்ந்த ஜெயநகரத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலால் இந்த இடும்பன் நதிக் கண்மாய்க்கு மடை அமைக்கப்பட்ட செய்தியானது இடம் பெற்றுள்ளது.

இடும்பன் நதிக்கண்மாய் ஒரு காலத்தில் நகரத்திற்கும், சேர்ந்தன் குடிக்கும் நீர் ஆதாரமாகவும் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. தற்போது உள்ள நகரம் வெற்றியின் அடையாளமாக விஜயநகரம் என உருவாக்கப்பட்டு அங்குள்ள பாலசுப்பிரமணியர் கோயிலால் மடை அமைக்கப்பட்டுள்ளதும் இங்குள்ள இடும்பன் சுவாமியின் பெயராலேயே இக்குளத்திற்கு இடும்பன் குளம் என பெயரிட்டதும் தெரிய வருகிறது. இங்குள்ள இடும்பன் சிலை சுப்பிரமணியர் கோயிலுக்கு வடபுறம் தனி சன்னிதியில் உள்ளது.

தோளில் தடியை வைத்து இருபுறமும் சிவ மலையை உறியாகக் கட்டி காவடியை போல் சுமந்து நிற்கும் இந்தச் சிலை எவ்வாறு பழனி மலை உருவாகக் காரணமாக இருந்ததோ அதே போன்று நகரம் சுப்பிரமணியர் கோயில் உருவாகக் காரணமாகவும் அமைந்திருக்கலாம். இதுவரை பாலசுப்பிரமணியர் கோயிலுக்கென கல்வெட்டுக்கள் இல்லாத நிலையில் இந்த கல்வெட்டு சிறப்பினை பெறுகிறது. மேலும் நகரம் பாலசுப்பிரமணியர் கோயிலின் விதானத்தில் தற்போது பார்த்ததில் ஒரு சில இடங்களில் எழுத்துக்கள் தென்படுகிறது. புதுக்கோட்டை சேந்தன்குடி பெரியாத்தாள் குளத்தில் ஆய்வு மேற்கொண்ட தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை இவ்வாறு தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: