திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே உள்ள ஐவர் மலையில், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டை கண்டறிந்து, வரலாற்று ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஐவர் மலை அமைந்துள்ளது. கி.பி., 810 நுாற்றாண்டுகளில் அயிரை மலை சமண முனிவர்களும், அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணப்பள்ளியாக இருந்துள்ளது; இந்த பள்ளியோடு பாண்டிய நாட்டின் சமணப் பள்ளிகளும் தொடர்பு இருந்துள்ளது என தொல்லியல்துறை அறிவிப்பு தெரிவிக்கிறது. அங்குள்ள குகைத்தளப் பாறையின் சரிவுப் பகுதியில் சமணத் தீர்த்தங்கரர்கள், 16 பேரின் புடைப்பருவச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்கு, கல்வெட்டு ஆய்வாளர்கள் சுந்தரம், விழுப்புரம் வீரராகவன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு, புதிய வட்டெழுத்து கல்வெட்டினை கண்டறிந்துள்ளனர்.

கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் கூறியதாவது: சேக்கிழார் என்பவர், அளித்த தகவல் அடிப்படையில், கல்வெட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அது, பாறைத்தரையில் ஒரு சிறிய ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு, வட்டெழுத்தினால் பொறிக்கப்பட்டு இருந்தது. ஐவர் மலையில் உள்ள வட்ட எழுத்து கல்வெட்டுகள், கி.பி., ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இதில், சமணத் துறவியான, பூவேரி அடிகள் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அடிகள் என்னும் சொல், இங்குள்ள ஒரு கல்வெட்டில், ஆசிரியர் நிலையில் இருந்த சமணப் பெரியாரை குறிப்பதால் (குணவீரக் குரவடிகள்) புதிய கல்வெட்டில் உள்ள பூவேரி அடிகள் என்னும் பெயர், அவரும் ஒரு ஆசிரியர் என்பதை குறிக்கிறது. மாணாக்கர் என்னும் சொல், பூவேரி அடிகளின் மாணாக்கர் ஒருவர் இங்கு இருந்துள்ளார் என்பதை குறிக்கிறது எனலாம்.மற்றொரு கல்வெட்டில், வடபள்ளி என ஊர் பெயர் காணப்படுகிறது. புதிய கல்வெட்டிலும் இதே காணப்படுவதால், ஐவர் மலைக்கு அருகில், வடபள்ளி என்ற பெயரில் ஊர் அமைந்திருக்க கூடும் என கருத வாய்ப்பு உள்ளது.கல்வெட்டு முழுமையாக இல்லாததால், கல்வெட்டின் செய்தி இன்னதென்று புலனாகவில்லை. பூவேரி அடிகளின் மாணக்கர் ஏதோ ஒரு கொடையை அளித்துள்ளார் என கருத வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், இப்பகுதியில் ஆய்வு செய்தால், புதிய செய்திகளை கொண்ட கல்வெட்டுகள் கிடைக்க கூடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: