பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராம அம்மன் கோயிலில் 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆர்வலர்கள் பாலசுப்ரமணி, தண்டபாணி ஆகியோர் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில் உள்ள சிறுத்துண்டி அம்மன் கோயிலில் புதைந்த நிலையில் ஒருகல்வெட்டை எடுத்து ஆய்வு செய்தனர்.
கல்வெட்டில் கலியுகம் 4786 தாரணஆண்டு, 1685ம் ஆண்டில் கோயில் கும்பாபிேஷக செய்தியும் இருந்ததால், இது 17ம்நுாற்றாண்டு கல்வெட்டு எனத் தெரியவந்துள்ளது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: கல்வெட்டில் 35வரிகள் உள்ளது. சிஞ்சுவாடியை ஆண்ட குறுநில மன்னர் சம்பநாயக்கர் தன்குலதெய்வ சிறுத்துண்டியம்மன் கோயிலை கட்டியுள்ளார். நிலம் தானமாக கொடுத்ததும், அதற்கு இடையூறு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ஊர்மக்கள் சிறுத்துண்டியம்மன் கோயிலை புதுப்பித்து வழிபடுகின்றனர், என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>