காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

நான்கு நுாற்றாண்டுகளுக்கு முந்தைய, ‘தலையறுத்தான் கல்’ எனப்படும் வீரர் நினைவுச் சின்னம், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், கோவிந்தவாடி கிராமத்தில், மந்தவெளி பகுதியில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புரனமைக்கப்பட்டது. அந்த கோவிலில், தலையறுத்தான் கல்லை பலி பீடமாக அமைத்து, கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதன் பெருமை தெரியாமல், ‘சாதாரண கல்’ என, அவர்கள் கருதி வந்தனர். இந்த பலி பீடம், 17-ம் நுற்றாண்டைச் சேர்ந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், போர் வீரர்கள் வீர மரணம் அடைவதன் நினைவாக, நடுகல் நடும் வழக்கம், பல நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்தது. இது போன்ற சிலைகள், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில், பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், தலையறுத்தான் கல், முதல் முறையாக, கோவிந்தவாடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல், 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது என, தொல்லியல் துறை பேராசிரியர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.இந்த கல், 2 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ளது. சிலையில் உள்ள வீரரின் வலக்கையில், எதிரியின் தலையும், மற்றொரு கையில் குறுவாளும் உள்ளது. தலையில் கொண்டையும், மார்பில் பாதுகாப்பு கவசங்களும், ஆடை அணிகலன்களுடன் இருக்கிறது. போரில் வெற்றி பெறுவதற்கு, வீரர்களை பலி கொடுக்கும் வழக்கம் பல நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நினைவாக, அரிகண்டம், நவ கண்டம் சிலைகள் எழுப்பப்படுகின்றன. அது போல, போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக, நடுகல் எழுப்பப்படுகிறது. அந்த வரிசையில், எதிரி நாட்டு மன்னன் மற்றும் போர் வீரர்களில் முதன்மையான ஒருவரின் தலையை அறுத்து, அதை கையில் எந்தி வரும் வீரரின் நினைவாக அமைப்பது தான், இந்த, தலையறுத்தான் கல் என, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: