தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு!

தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! - உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு!

தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு!

இன்று (06-04-2018) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (Tamilnadu Journalist Union-TJU) மாநில தலைவர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த உலக தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் அக்னி அவர்கள் பேசும் பொழுது, ‘தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்’ என்றதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று பலத்த கைதட்டல் செய்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிராபிக் ராமசாமி, TUJ மாநில தலைவர் சுபாஷ், அம்மா திமுக பேரவை நிறுவனர் இனியன் சம்பத், தென்னிந்திய பத்திரிக்கை சங்க தலைவர் சீனிவாசன், தஞ்சை தமிழ்பித்தன், பாவலர் ராமச்சந்திரன், ஆம் ஆத்மீ கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ஆம் ஆத்மீ கட்சி மாநில இணை செயலாளர் சுதா, Print Media Journalist Social Welfare Trust President & போர்முரசு ஆசிரியர் ஸ்டீபன் ராஜ். மக்கள் நம்பிக்கை இணையதள தொலைக்காட்சி மற்றும் இதழ் ஆசிரியர் அரவிந் , அமானுஷ்ய ஆராய்ச்சி மைய நிறுவனர் சாமி, தமிழ்நாடு ஊடக துறையினர் பாதுகாப்பு சங்க தலைவர் மோகன், தமிழக விவசாய சங்க சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி, பத்திரிகையாளர் குப்தா, மக்கள் உரிமை கழக தலைவர் கல்பனா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மாநில உயர்மட்ட நிர்வாகிகள், மாநில பொதுச் செயலாளர் மு.கிருஷ்ணவேணி, மாநில பொருளாளர் ராஜகோபால் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டது பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.


 – புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்…. (4 படங்கள்)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: