அர்மேனியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச, ‘உசூ’ (சீன தற் காப்புக்கலை) விளையாட்டு போட்டியில், மாநிலத்தின் சார்பில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவியர் வென்றுள்ளனர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி கயல்விழி, தனியார் பள்ளி யில், 9ம் வகுப்பு படிக்கிறார். அதே பள்ளியில், பிளஸ் 1 படித்து வரும் மாணவி ஹரிணி. இவர்கள் இருவரும், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு, மாநில அளவில் நடந்த, உசூ விளையாட்டு போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றுள்ளனர். தற்போது, கடந்த ஏப்., 21 முதல், 23 வரை, அர்மேனியா நாட்டில் நடந்த சர்வதேச, உசூ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கயல்விழி, 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஹரிணி, 17 வயதிற்குட்பட்ட பிரிவில், வெள்ளி வென்றுள்ளார். இதுவரை இவர்களை பாராட்டி அரசு கவுரவிக்கவில்லை.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நான், 4 வயது முதல் டேக்வாண்டோ தற்காப்பு கலை விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறேன். அதனுடன், உசூ விளையாட்டு பயிற்சியும் தெரியும். 2016 ஜன., 31ல், மாநில அளவில் நடந்த உசூ போட்டியில் தங்கம் வென்றேன். அதன் மூலம் சர்வதேச விளையாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்வேன் என்று ஆர்.ஏ.கயல்விழி, கூறினார்.
கடந்த, எட்டு ஆண்டுகளாக டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி பெறுகிறேன். அதனுடன், உசூ விளையாட்டும் கற்று வருவதால், கடந்த மாதம் நடந்த சர்வதேச விளையாட்டு போட்டியில், முதல் இரு சுற்றில் வெற்றி பெற்று, இறுதி சுற்றில் தங்கம் கை நழுவியது. வெள்ளி பதக்கம் கிடைத்தது என்று வி.ஹரிணி, கூறினார்.
Pingback: Gokul varadhan