உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் எனபேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 ஆம் விதியின் கீழ் தமிழ் வளர்ச்சித்துறை சார்ந்த பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் விவரம்: அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும், தூய்மையும் மிக்க மொழியாகவும், வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், வீரம் செறிந்த மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகமெங்கும் பரப்புவதிலும் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, தமிழ் மொழியை சிறப்பிப்பதை முன்னெடுத்து செல்லும் விதமாக, இத்துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் அறிவிக்கின்றேன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பாடுபட்டவர்களின் வாழ்வியலைப் பன்முக நோக்கில் ஆராய்ந்து, வளரும் தலைமுறையினரும் எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: