திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி - அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், 11-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, ‘தமிழ் இனிமையான மொழி. அதனால் தான், நான் அதை விரும்புகிறேன்’ என, கவர்னர் கூறினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


விழாவில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: தமிழ் பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை மீட்டெடுக்க, பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில், 10 இடங்களிலும், வெளி நாடுகளில், 16 இடங்களிலும், தமிழ் வளர் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, ஆய்வுப் பணியை மட்டுமே செய்து வந்த தமிழ் பல்கலைக்கழகம், இப்போது வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு பணியையும் செய்கிறது. தமிழ்ப் பண்பாட்டு மையத்தில், ஓராண்டில், 30 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நிகழாண்டு இறுதிக்குள், இரண்டு லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும். இந்த இரு திட்டத்தின் மூலம், நாக் எனப்படும், தேசிய தர நிர்ணயக் குழுவின், ‘ஏ பிளஸ் பிளஸ்’ சான்று பெற்று விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆக்ஸ்போர்டு, ஜோகனஸ்பர்க், மலேயா, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களிலும், தமிழ் ஆய்வு இருக்கை துவங்கப்பட உள்ளன. ஏற்கனவே, பல்கலைக்கழகங்களில் துவங்கப்பட்ட ஆய்வு இருக்கையை, முறையாக இயங்க வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழின் தொன்மையை, உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, யுனெஸ்கோவில், உலகப் புத்தகம் என்ற அங்கீகாரத்தை, திருக்குறளுக்கு பெற்றுத் தரும் முயற்சி, எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மின்னணு நுாலகத் திட்டத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான நுால்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

விழாவில் பேசிய, மக்கள் நீதிமன்ற நீதிபதி, வள்ளிநாயகம், ‘அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள், அறிவு நுணுக்கங்களுக்காக, தமிழை நோக்கி தவமிருக்கின்றன. ‘உலகம் உருண்டையானது, என தேவமாலை பாடலிலும், தசாவதாரத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ‘நீதி துறை சட்டங்கள் அனைத்துக்கும், அடிப்படை மூலம், தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அக்காலத்தில் இருந்து, தமிழன் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்கி உள்ளான்’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>