அகில இந்திய வீல்சேர் ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் பாலச்சந்தர் சாம்பியன்!

அகில இந்திய வீல்சேர் ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் பாலச்சந்தர் சாம்பியன்!

அகில இந்திய வீல்சேர் ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் பாலச்சந்தர் சாம்பியன்!

அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் ஓபன் டென்னிஸ் போட்டியில், தமிழக வீரர் பாலச்சந்தர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மெரீனா ஓபன் வீல்சேர் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடந்தது.

அதன் இறுதி போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் பாலச்சந்தர் 6-4, 6 – 7, 6 – 0 என்ற செட் கணக்கில், கர்நாடக வீரர் சேகர் வீராசாமியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த கார்த்திக், பாலச்சந்தர் ஜோடி, கர்நாடகாவை சேர்ந்த கோபிநாத், சேகர் வீராசாமியை வென்று சாம்பியன் பட்டத்தை ஜெயித்தது. பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில், நளானி 6 – 0, 6 – 0 என்ற செட் கணக்கில், பிரதிமாவை தோற்கடித்தார். இவர்களுக்கு பரிசு தொகையுடன், புள்ளிகள் வழங்கப்பட்டன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: