வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘ஆனைப்புளி’ பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம், ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை கைதூக்கி விடும் அரசாக திமுக அரசு உள்ளது. மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்துள்ளது என தெரிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 10 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

குடிசைகளை மாற்றி அடுக்குமாடிகளை கட்டித்தர வேண்டும் என்ற பணிகளை செய்து வருகிறது. அனைவரது கோரிக்கைகளை செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சியாக இருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: