தமிழர்களின் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருநாள்களுக்கு 2017-ல் விடுமுறை இல்லையாம், ஆனால், தமிழர்களுக்கு தொடர்பில்லாத, உகாதி, ஓணம் போன்றவைகளுக்கு தமிழகத்தில் விடுமுறையா

தமிழர்களின் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருநாள்களுக்கு 2017-ல் விடுமுறை இல்லையாம், ஆனால், தமிழர்களுக்கு தொடர்பில்லாத, உகாதி, ஓணம் போன்றவைகளுக்கு தமிழகத்தில் விடுமுறையாம்!

தமிழர்களின் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருநாள்களுக்கு 2017-ல் விடுமுறை இல்லையாம், ஆனால், தமிழர்களுக்கு தொடர்பில்லாத, உகாதி, ஓணம் போன்றவைகளுக்கு தமிழகத்தில் விடுமுறையாம்!

2017-ல் தேவையில்லாமல் பல விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தெலுங்கு ஆண்டு பிறப்புக்கு ஏன் தமிழகத்தில் விடுமுறை? மகாவீர் பிறந்த நாளுக்கு எதற்கு விடுமுறை? இது மட்டுமல்லாமல் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார் மாவட்ட ஆட்சியர்.

தமிழர்களுக்கு எத்தனை விடுமுறை இவற்றில் உள்ளது? பொங்கல், திருவள்ளுவர் நாள், உழவர் திருநாள், தமிழ் ஆண்டு பிறப்பு (இதை பலரும் ஏற்கவில்லை ). இத்தோடு தமிழர்களுக்கு விடுமுறை இல்லை. இந்தியர்களுக்கு சுதந்திர நாள், குடியரசு நாள் விடுமுறை உண்டு . (சுதந்திரமும் குடியரசும் இந்திய நாட்டில் இன்னும் மலரவே இல்லை ). பிற விடுமுறை நாள்கள் இந்து முஸ்லீம் கிருத்துவ மதங்களை சார்ந்தவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

தமிழர் மதத்தின் திருவிழாவான ஆடிப்பெருக்கு, தைப்பூசம், கார்த்திகை தீபக் திருநாள்களுக்கு விடுமுறை இல்லை. தமிழ்த் தேசிய நாளான மொழிப் போர் ஈகியர் நாள் சனவரி 25, தாயகத் திருநாள் நவம்பர் 1 இவைகளுக்கு விடுமுறை இல்லை.

பலமுறை இதுகுறித்து எழுதியும் தமிழக அரசு இதை கருத்தில் கொள்ளவே இல்லை என்பது வேதனை. சிறிதேனும் தமிழ் உணர்வுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து அரசுக்கு தெரிவித்து ஆவன செய்தல் வேண்டும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


2017-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் பட்டியல்:

ஜனவரி 1 – ஆங்கிலப் புத்தாண்டு,
ஜனவரி 14 – பொங்கல்,
ஜனவரி 15- திருவள்ளுவர் நாள்,
ஜனவரி 16 – உழவர் திருநாள்,
ஜனவரி 26 – குடியரசு நாள்,
மார்ச் 3 – தெலுங்கு வருடப்பிறப்பு,
ஏப்ரல் 1 – வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு,
ஏப்ரல் 9 – மகாவீர்ஜெயந்தி,
ஏப்ரல் 14 – தமிழ்ப் புத்தாண்டு,
மே 1 – உழைப்பாளர் தினம்,
ஜூன் 6 – ரம்ஜான்,
ஆகஸ்ட் 14 – கிருஷ்ண ஜெயந்தி,
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்,
ஆகஸ்ட் 25 – விநாயகர் சதுர்த்தி,
செப்டம்பர் 2 – பக்ரீத்,
செப்டம்பர் 29 – ஆயுத பூஜை,
செப்டம்பர் 30- விஜயதசமி,
அக்டோபர் 1 – மொகரம்,
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 18 – தீபாவளி,
டிசம்பர் 1 – மீலாது நபி,
டிசம்பர்25 – கிறிஸ்துமஸ்.

தமிழக ஆளுநரின் ஆணைப்படி, அரசு தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், இந்த பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொத்த விடுமுறை நாட்கள் 22. அவற்றில் எட்டு விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: