யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!

யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!

யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!

தமிழக கோவில்களில், இரண்டு கட்ட ஆய்வை முடித்த, யுனெஸ்கோ குழுவினர், சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள முறைகேடுகள் குறித்த வழக்கில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான, யுனெஸ்கோ குழுவினரின் ஆய்வுக்கு, உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதன்படி, யுனெஸ்கோ குழுவினர், இரு கட்டங்களாக, கோவில்களில் ஆய்வு நடத்தினர். காஞ்சிபுரம் கோவில்களில், நேற்று ஆய்வை முடிந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அத்துடன், அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள், சிற்பிகள், புகார்தாரர்கள் போன்றோருடன் கலந்தாய்வு நடத்தினர். பிரசித்தி பெற்ற கோவில்களில் பல சிற்பங்கள், கோபுரங்கள் மற்றும் கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை கண்ட, குழுவினர் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தனர். குழுவினர் இரு கட்டமாக நடத்திய ஆய்வின் அறிக்கையை, விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>