இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி! தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ!

இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி! தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ!

இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி! தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ!

திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெனிதா. கடந்த வருடம் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற, உலகின் முதல் மாற்றுத்திறனாளி எனும் பெருமை பெற்றவர். தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகச் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வருகிறார்.

இந்தோனிசியா நாட்டில் ஜெகர்தா நகரில் ஆசிய பாரா விளையாட்டு 2018 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 18 வகை விளையாட்டுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. எனவே, ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் 44 நாடுகள் கலந்து கொண்ட மிகப் பெரிய பாரா விளையாட்டுப் போட்டி இதுதான். இப்படியான போட்டியில் உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 198 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இந்த விளையாட்டுப் போட்டிகள் முடிந்தது. இறுதியாக இந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் வென்று சாதித்துள்ளனர். இந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் செஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோ மற்றும் கனிஷ் ஸ்ரீசெஸ் கலந்து கொண்டனர்.

இதில் ஜெனிதா ஆண்டோ தனிநபர் செஸ் போட்டியில் தங்கப் பதக்கமும் மற்றொரு தனிப்பட்ட செஸ் போட்டில் வெள்ளிப் பதக்கம், அணிகள் சார்பில் நடந்த போட்டிகளில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

போலியோ தாக்குதலால் மாற்றுத்திறனாளியாகிப்போன ஜெனிதா உலக அளவில் வாங்கிக் குவிக்கும் பதக்கங்களுக்காக மட்டுமல்ல தன்னம்பிக்கையான அவரின் போராட்டங்களுக்கு அவரைப் பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: