பாரதியார் என்னும் சகாப்தத்துக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்தில் புகைப்பட கண்காட்சி வைத்து மரியாதை

கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பாரதியார் 150 பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து புகைப்பட கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர். பாரதியார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கோவை அரசு போக்குவரத்து கழகம் இதற்கென ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து, அதில், பாரதியாரின் பல்வேறு புகைப்படங்கள், வாசங்களை ஒட்டியுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி பேருந்து நேற்று ஊட்டிக்கு வந்தது.  பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பஸ் நிலையம், ஏடிசி., பேருந்து நிலையம் போன்றபகுதிகளில் இந்த பேருந்து பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கண்டு ரசித்து சென்றனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: