திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு!

திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு!

திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு!

திருநங்கை என்பதால், மத்திய அரசு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால், என்னை கருணைக் கொலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு திருநங்கை ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அதுதொடர்பாக அவர், முதல்வர் தனிப்பிரிவில் இன்று மனு கொடுத்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்தவர் ஷாணவி பொன்னுசாமி. இவர், முதல்வர் தனிப்பிரிவில் இன்று பரபரப்பான மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘என்னுடைய குடும்பம் ஏழ்மையானது. குடும்பத்தின் முதல் பட்டதாரியான நான், பொறியியல் கல்வியிலும் முதல்வகுப்பில் தேர்ச்சிபெற்றுள்ளேன். அதன்பிறகு, சமூக புறக்கணிப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் வசித்தேன். வேலை தேடி பல நிறுவனங்களுக்குச் சென்றேன். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினேன். அங்கு வேலையில் சேரும்போதே பெண் என்று அங்கீகரிக்கப்பட்டேன். ஒரு வருட அனுபவம் பெற்ற பிறகு, எனது பாலியல்ரீதியான மாற்றங்களை அதிகாரபூர்வமாக தமிழ்நாடு அரசிதழில் முறையாக அறிவித்தேன்.

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிக்கான வேலைக்கு விண்ணப்பித்தேன். அப்போது, ஆண் பெண் என்ற பாலினம் மட்டுமே விண்ணப்பத்தில் இருந்தது. 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருநங்கையர்களை மூன்றாவது பாலினமாக அந்த விண்ணப்பத்தில் சேர்க்கவில்லை. வேறு வழியில்லாமல், பெண்களுக்கான பிரிவில் விண்ணப்பித்து, அதற்கான நேர்முகத் தேர்வுக் கடிதத்தைப் பெற்றேன். ஆனால், நான்கு முறை முயற்சித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. விசாரித்தபோது, ஆண் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது தெரிய வந்தது. இதில், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றும் தெரிந்தது. எனவே, நான் நேரடியாக டெல்லியில் உள்ள விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்துக்குச் சென்றேன். அங்கு கருணை உள்ளம்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், என்னுடைய படிப்பு மற்றும் அனுபவச் சான்றிதழ்களைச் சரிபார்த்துவிட்டு, உடனடியாக ஏர் இந்தியாவைத் தொடர்புகொண்டு, வேலை வழங்குமாறு தெரிவித்தார். மேலும், தகுதியுள்ள பொறியியல் பட்டதாரியான இவருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதன்மூலம் ஏர் இந்தியாவின் மதிப்பு உயரும் என்று கூறினார். ஆனால், ஏர் இந்தியா உயரதிகாரிகள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

அதனால், நான் நேரடியாக ஏர் இந்தியா தலைமை அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால், அங்கு அவமானங்களைத்தான் சந்திக்க நேர்ந்தது. மேலும், எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு பதிலளிப்பதாகத் தெரிவித்தனர். இதுவரை பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியபோது, அங்கிருந்து விமானத்துறை அளித்த பதில் என்னை நிலைகுலையச் செய்தது. அதாவது, ‘திருநங்கைகளைப் பணியில் சேர்க்க இயலாது’ என்று பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, 6.11.17 அன்று உரிய பதில் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் விமானத்துறை மற்றும் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. வழக்கைத் தொடர்ந்து நடத்த பொருளாதார வசதியில்லை. எனவே, தகுதி மற்றும் திறமை இருப்பினும் திருநங்கை என்ற காரணத்தால் வேலையிலிருந்து நிராகரிக்கப்பட்ட நான், கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்தேன். எனவே தமிழக அரசு, திருநங்கை சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பைத் தர மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்த வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷானவி பொன்னுச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப் பிரிவில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு, விவசாயிகளுக்கு பிரச்னை வரும் போது, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துவது போல, திருநங்கை சமுதாயத்திற்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், தனி இட ஒதுக்கீடு வழங்கும்படி வற்புறுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் ஷாணவி கூறியுள்ளார். எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேறு யாரும் இல்லை. இதை வலியுறுத்தி தான் நான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தனக்கு பணி ஒதுக்க வேண்டும் என்றும் ஷானவி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: