வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று முதல் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் அறிவிப்பு

 

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  சார்பில். முதல் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு இன்று நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட நிரலில் நடத்தவிருக்கும் குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய பதவிகளுக்கு அறிவிப்பாணையை எதிர்நோக்கி மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
அவர்கள் தங்களை போட்டி தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி, இன்று (செப்.3) முதல் பிரதி திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மாணவர்கள் நேரில் பங்குபெறும் வகையில் நேரடி இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புவோர், நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டி தேர்வுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் இணையதள வசதிகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>