`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, CAA நிலைப்பாடு!’ – ஆளுநர் உரை!

`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, CAA நிலைப்பாடு!’ – ஆளுநர் உரை!

2020-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் எனத் தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ஆளுநர் உரை – முக்கிய அம்சங்கள் :

1. தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

2. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்

3. முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்தபடி காவிரி – தெற்கு வெள்ளியாறு இணைப்பு வரும் ஆண்டில் நடக்கும்

4. ரூ.50.50 கோடியில் ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.

5. ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தமிழகத்தின் 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.

6. உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. சர்க்கரை ஆலைகளின் மறுமலர்ச்சிக்கு உதவ மத்திய அரசு நிதிச் சலுகைகளை அறிவிக்க வேண்டும்

8. முக்கையூரில் ரூ.120 கோடி மற்றும் குந்துகல்லில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் பணி விரைவில் முடியும். நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி, முதுநகர் ஆகிய பகுதிகளில் ரூ.420 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

9. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 52.01 கி.மீ தொலைவுக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2020-ம் ஆண்டு மத்தியில் முடிவடையும்.

10. டெங்கு, மலேரியா, சிக்குன்குனியாவைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களுக்கும் விலையில்லா கொசுவலைகள் வழங்கப்படும்.

11. 2019-20ம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12. 2011-12 முதல் இப்போது வரை 3,80,00 பசுமை வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

13. ஆதார் இணைக்கப்பட்டிருப்பதால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த முடிகிறது.

14. அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டாலும் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: