தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 13ம்தேதி, 30வது கட்ட விசாரணை துவங்கி நேற்று வரை நடந்தது. தற்போது வரையில் 1330 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 962 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, 1237 வகையான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்த கட்ட விசாரணை, வரும் அக்.20ம் தேதி நடக்கிறது.
நன்றி : தினகரன்