தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கமிஷன் விசாரணை நீட்டிப்பு

துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் கமிஷனின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

 

கடந்த 2018 மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் போரட்டாதில் ஈடுபட்டிருந்த பொது வன்முறை வெடித்தது.இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் .

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. விசாரணை அதிகாரி மாதம்தோறும் துாத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வந்தார். மே மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துஇடைக்காலஅறிக்கையைதாக்கல் செய்தார்.

இந்நிலையில் விசாரணை கமிஷன் பதவி காலம் நாளை (ஆகஸ்ட், 22) நிறைவடைகிறது. விசாரணை நிறைவடையாததால் கமிஷனின் பதவிக்காலம் நாளை மறுதினம் முதல் 2022 பிப்ரவரி 22

ஆம் தேதி வரை வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: