அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி!

அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி!

அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பஜார் வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு விஜயலட்சுமி, 26, என்ற மகள், லட்சுமி நாராயணன், 24, என்ற மகன் உள்ளனர். இதில், விஜயலட்சுமி, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் வெளியான, ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவில், 791வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


என் தந்தை பாத்திரக்கடை வியாபாரி; பெரிய அளவிற்கு பொருளாதார வசதி கிடையாது. பெரிய குடும்ப பின்னணியும் கிடையாது. அதனால் போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பின் அருணை பொறியியல் கல்லூரியில், பி.டெக் படித்தேன். இருந்தாலும் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசையை பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் என்னை சென்னையில் உள்ள மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் சேர்த்தனர். கடந்த, 2012ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி வந்தேன். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பிரிவில் தோல்வி அடைந்து வந்தேன். தோல்வியை கண்ட துவண்டு போகவில்லை. இந்நிலையில், கடந்த, 2016ல் நடந்த பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றேன். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடந்த நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றேன். இதில் தேர்வான, 1,099 பேரில், நான், 791வது ரேங்க் பெற்றுள்ளேன். என்னுடைய இந்த வெற்றிக்கு, என் பெற்றோரே முழு காரணம். அரசு பள்ளியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் பெற்றி பெற முடியும் என்பதற்கு, என் வெற்றி ஒரு உதாரணம் என விஜயலட்சுமி கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: