ஆயிரம் ஓவியங்களுக்கு பின் அவதரித்த வள்ளுவன் !

ஆயிரம் ஓவியங்களுக்கு பின் அவதரித்த வள்ளுவன் !

ஆயிரம் ஓவியங்களுக்கு பின் அவதரித்த வள்ளுவன் !

வேணுகோபால் சர்மா :

தமிழக அரசு பயன்படுத்தும் திருவள்ளுவர் ஓவியத்தை தீட்டியவர் வேணுகோபால் சர்மா. தமது பன்னிரெண்டு வயதில் வள்ளுவருக்கு உருவம் கொடுக்கத் தொடங்கிய சர்மாவால், 58 வயதில்தான் திருப்தியான வடிவத்தை வழங்க முடிந்தது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆயிரக்கணக்கான வள்ளுவர் உருவங்களை வரைந்து பார்த்து நிறைவே அடையாமல் தவித்தவர் அவர். இறுதி வடிவத்தை எட்டியவுடன், அந்தச் சித்திரத்தை முதலில் பார்த்து வியந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். அதன் பின்னர் தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அந்த ஓவியத்தை கண்டு மெய்சிலிர்த்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


1964 ம் ஆண்டு, பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய குடியரசு தலைவர் ஜாகீர் உசேன், தமிழக சட்டப்பேரவையில், திருவள்ளுவர் உருவத்தைத் திறந்து வைத்தார்.

திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் வரை, திருமணமே செய்து கொள்ளவில்லை வேணுகோபால் சர்மா.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: