வள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை கடற்கரையில் வெளியீடு !

வள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை கடற்கரையில் வெளியீடு !

வள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை கடற்கரையில் வெளியீடு !

சனவரி 15, 2017 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இருபதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் முன்னிலையில் திருவள்ளுவர் கொடியான உலகப்பொதுமறை கொடி தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழ் ஆன்றோர் அவையும் ஒருங்கிணைந்து வெளியிட்டன. உலக வரலாற்றில் முதல் முறையாக திருவள்ளுவருக்கு என்று தனிக்கொடி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பின்னர் திருவள்ளுவர் சிலை வரை பேரணியாக திருவள்ளுவர் ஊர்வலம் சென்றது. கூடுதல் சிறப்பாக பேரணியில் சிலம்பாட்டம், பறையாட்டம் போன்ற தமிழர் கலைகள் இடம் பெற்றது. திருக்குறள் பற்றாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.

பேராசிரியர் இறையரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் யார் கண்ணன் , திரு செயதேவன், திரு.கோ.கண்ணன், திரு. காரை மைந்தன், திரு.கீ.த.பச்சையப்பனார், திரு. தனபாலன், மறை.தாயுமானவன் உள்ளிட்ட பல தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை கடற்கரையில் வெளியீடு !

வள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை கடற்கரையில் வெளியீடு !

இக்கொடி எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் சொந்தமான கொடி அல்ல. இது ஒரு பொதுக்கொடியாகும். திருக்குறளை ஏற்கும் யாவரும் இந்தக் கொடியை ஏற்றலாம். திருவள்ளுவர் விழா, தமிழ் விழா போன்ற விழாக்களில் இக்கொடி இனி ஏற்றப்பட வேண்டும். தமிழக அரசும் இக்கொடியை அங்கீகரிக்க முன் வர வேண்டும் என்ற மேற்படி கோரிக்கைகளை விழாவுக்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள் முன்வைத்தனர்.

தமிழகத்திலும், தமிழகம் தாண்டியும் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் உலகப்பொதுமறை கொடி அனுப்பி வைக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர... திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் - மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!...
உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!... உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை! உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை...
திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம்! – ரஷ்... திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம்! - ரஷ்ய தூதுவர் தகவல்! Russia keen on THIRUVALLUVAR STATUE At a time when the Centre decided to celebrate the...
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
Tags: