விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

 
விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை
facebook sharing button
”விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும்” என காந்தியை மாற்றிய தமிழ்நாடு என்ற தலைப்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

விழாவில் கதராடை மற்றும் நுாலை தியாகி லட்சுமிகாந்தன் பாரதி வெளியிட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெற்றுக் கொண்டார்.பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது: செயற்கைகோள் தயாரிப்பு பணி என்பது நிறைய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி. ஊரடங்கால் இரண்டாண்டுகளாக இப்பணிகள் முழுமையாக நடக்கவில்லை. சந்திராயன் 1 விண்கலம் ஆயுள் முடிவதற்கு இரண்டாண்டுகள் உள்ளன. அதற்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் வெற்றி பெறுவோம். விமானத்தில் பயணிப்பதை போல விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும். அதை சுற்றுலாவுக்காக ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம்.

latest tamil news


இந்த விண்வெளி பயணம் எல்லோருக்கும் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளன. செவ்வாயில் விவசாயம் செய்ய வாய்ப்புள்ளதா என ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்து அங்குள்ள மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை உருவாக்க முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இங்கிருந்து செவ்வாய் கிரகம் செல்ல 9 மாதங்களாகிறது. அந்த பயண நாட்களில் தாவர உற்பத்தி செய்து சமைக்க முடிவதற்கான சாத்திய கூறுகளும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி : தினமலர்

 

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>