தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி 20% இட ஒதுக்கீடு திட்டம் கொண்டுவரப்பட்டது.

 

முழுக்க, முழுக்க தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது . அதன்படியே கடந்த 2020ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டத் திருத்தம் செய்தது.

 
 
உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

இந்தச் சட்டத் திருத்தத்தை 20.01.2020 அன்று வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் அடிப்படையில், புதிய வழிகாட்டு விதிகளைத் தமிழக அரசும் வெளியிட்டது.

 
20சதவீதம் இடஒதுக்கீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிகளின்படி அரசின் எந்த வேலைவாய்ப்பாக இருந்தாலும் அதற்கான அதிகபட்சக் கல்வித் தகுதியை ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும்தான் 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

 
அரசு பள்ளி
 
சுழற்சி முறை

சுழற்சி முறை

இதன்படியே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள்,போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், கலப்புத் திருமண தம்பதியர் ஆகியோருக்கு அரசுப்பணிகளில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: