ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை ஈடுபடுத்த வகை செய்யும் மத்திய அரசின் அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டதன் மூலம் நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

நீதிபதிகள் கருத்து: இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது; 

பசுக்களிடம் இருந்து 50 முதல் 60 சதவீத பாலை கறந்து கொள்ளலாம் என சாஸ்திரங்களிலே கூறப்பட்டுள்ளது. விலங்கியல் பூங்காவில் விலங்குகளை வைத்துக் கொள்ள சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பொழுதுபோக்கிற்காக காளைகள் பயன்படுத்தப்படுவதை “கலை’ என வரையறுக்கிறீர்கள். ஆனால், விலங்குகள் அனுபவிக்கும் துன்பம், வலி ஆகியவற்றை அவை கண்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க நீதிபதிகளின் இக்கருத்தை விலங்குகள் நல வாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அஞ்சலி சர்மா ஆமோதித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன;

இந்த மனுக்களின் மீதான இறுதி விசாரணை புதன்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ரோகின்டன் பாலிநாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விலங்குகள் நல வாரியத்தின் தரப்பில் மூத்த வக்கீல் கணேஷ், ஏற்கனவே உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறும் வகையில் அரசின் அறிவிக்கை அமைந்துள்ளது, இது மிருகவதை தடை சட்டத்துக்கு எதிரானது என்றார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமளவில் மிருகநல வாரியம் கூறுவதைத்தான் கூறியுள்ளது. ஆனால் நாங்கள் இதனை வேறுவகையில் பார்க்கிறோம் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு தமிழக அரசு வக்கீல் யோகேஷ்கன்னா, ஜல்லிக்கட்டு பற்றி மதுரை பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை நீதிபதிகளிடம் அளித்தார். தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக காளைகளை அடக்குவது. இந்த விளையாட்டில் எக்காரணம் கொண்டும் காளைகள் காயம் அடைவது இல்லை என்று விளக்கினார்.

இதற்கு நீதிபதிகள் காளைகள் காயப்படுவது இல்லை என்றால் மனிதர்கள் காயம் அடைகிறார்கள் என்று கூறினார்கள். தமிழக அரசு வக்கீல் சேகர் நாப்டே, ஜல்லிக்கட்டில் வீரமான இளைஞர்களால் காளையின் மிதிலை தழுவி காளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஒரு காளையுடன் மொத்தம் 3 நிமிடங்கள் மட்டுமே செலவிடப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு காளையுடன் செலவிடப்படும் நேரம் 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் நினைத்தால் மிருககாட்சி சாலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். காட்டில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் சிங்கத்தை பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கூண்டில் அடைத்து மனிதர்களின் காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறது. அதேபோல, குதிரைகளை வைத்து பந்தயம் நடத்தப்படுகிறது. அதற்காக இவற்றையும் தடை செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் அறிவிக்கை ஒதுக்கிவைக்க முடியுமா? என்பது தான் கேள்வி என்றனர்.

கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, மத்திய அரசின் அறிவிக்கை எந்த வகையிலும் தீர்ப்புக்கு எதிராக அமையவில்லை, கலாசார உரிமை என்ற விஷயத்தையும் நம்மால் ஒதுக்கித்தள்ள முடியாது என்றார். இந்த வழக்கின் மீதான விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் வாதாட சுப்பிரமணியன் சுவாமி சம்மதம் தெரிவித்துள்ளார். விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி வாதாட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், டெல்லியில் சுப்ரமணியன் சுவாயை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்தே சுப்ரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டு வழக்கில் ஆஜராக சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரமணியன் சுவாமியின் பூர்வீகம் மதுரை மாவட்டம் சோழவந்தான் என்பதால்தான் அடிக்கடி மதுரை மாவட்டத்தில் பிரச்சினை என்றால் கிளம்பிவிடுவார். சோழவந்தானுக்கு அருகில்தான் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் உள்ளது. அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில்தான் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா ஆஜராகி முன்வைத்த வாதம்:

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மத்திய அரசு கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிவிக்கையில், காளைகள் வதைபடுவதைத் தடுக்கவும் அவற்றின் நலன்களைப் பாதுகாக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற காளைகள் பங்கேற்கும் போட்டிகள் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவை. குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படும். இதுபோன்ற பண்டிகைகள் மீதான மக்களின் நம்பிக்கையை ஒரே நாளில் கைவிட முடியாது.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளை இனத்தைப் பராமரிக்கும் பணியில் பல்வேறு குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. ஒரு காலத்தில் காளைகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன. தற்போது டிராக்டர் உள்ளிட்டவை இருப்பதால் விவசாயத்துக்கான காளைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.

இத்தகைய போட்டிகளை அனுமதிக்க விலங்குகள் வதை தடுப்புச் சட்டப் பிரிவு 22(1)-ம், போட்டிகளுக்கு தடை விதிக்க பிரிவு 22(2)-ம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வதைக்கப்படுவதாகக் கூறி அவை போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோருவது ஏற்புடையதாக இல்லை. பால் கறப்பதால் பசுக்களுக்கு வலிக்கத்தான் செய்யும். இருப்பினும் தேவைக்காக பால் கறக்கத்தான் செய்கிறோம். காட்டில் உள்ள விலங்குகள் சிலவற்றை நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் கூண்டுக்குள் வைத்துள்ளோம். அவை துன்பத்துக்கு ஆளாவதாகக் கூறுகிறோமா?

ஜல்லிக்கட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதே கண்ணோட்டத்துடன்தான் ஜல்லிக்கட்டில் காளைகளை ஈடுபடுத்த வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதில், எந்த வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறவில்லை என்றார் நரசிம்மா.

நிராகரிப்பு:

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையில் காளைகள் வளர்ப்போர் கருத்தையும் கேட்க வேண்டும் என்று, காளைகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெகதீஷ் குப்தா கேட்டுக் கொண்டார். ஆனால், அதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Tags: ,

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: