திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!

திருப்பூரில் தீரன் சின்னமலையின் போர்ப்பயிற்சிப் பாசறை படைக்கலப் பட்டறை!  திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது.

இது அமைந்துள்ள “பட்டாலி “- என்ற கிராமத்தை 18 – 4 – 1792ல் பட்டாலி வேட்டுவர் குல அனுமந்தக் கவுண்டரிடமிருந்து ரூ.200/-க்கு தீரன் சின்னமலை விலைக்கு வாங்கி/ 31-7-1805-ல் வீரர்களுக்குப் போர்ப்பயிற்சி தரவும், படைக்கலன்கள் தயாரிக்கவுமாக ஒரு பக்காவான இந்தப் பட்டறையை உருவாக்கினார்

அன்று மக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக்கொள்வது குற்றம் என ஆங்கிலேயன் அறிவித்ததற்கு எதிர்ப்பாக தீரன்சின்னமலை தன் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க ஒரு பக்காவான போர்ப்பயிற்சிப் பாசறை அமைத்தார். அதுதான் படத்தில் காண்பது.

இது இன்று சிதிலமடைந்து அழியும் தருவாயில் உள்ளது. இதனை நம் வருங்கால இளைய தலைமுறையினர்அறிந்து கொள்ளும் வகையில் பாகாக்க மத்தியத் தொல்பொருட்துறையினர்/தமிழக அரசும் ஆவன செய்திடவேண்டும்.

அமைவிடம் :
சிவன்மலை நேர்பின்புறம் கிரிவலப்பாதையில் உள்ள அனுமந்தராயன் கோவில்-வடக்குக் காம்பவுண்டு சுவர் தாண்டி எட்டிப்பார்க்கலாம். 

செய்தி: நன்றி. தினத்தந்தி’ 11-11-2021

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: