ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை குறித்து பல ஆண்டுகளாக தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, 7 பேரை விடுதலை செய்வது எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாள்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் எனவும் கூறியிருந்தார். இதை எதிர்த்து மத்திய அரசு, கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்தார், அப்போது அவர், ‘ ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார்.