தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிப்பு!

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிப்பு!

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்துள்ளது.

மாநில பறவை, மாநில விலங்கு, மாநில மரம், மாநில பூ, பட்டியலில் தற்போது தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியும் இடம் பெற்றுள்ளது. அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்திற்கென தனியாக மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


காட்டுயிர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு வகை அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 340 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வுசெய்ய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். வண்ணத்துப்பூச்சியைத் தேர்வுசெய்யும் முயற்சி, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. ஆரம்பத்தில், தமிழ் லேஸ்விங் Tamil Lacewing (Cethosia nietneri), எனப்படும் வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இது அபூர்வ வகை என்பதால் எளிதில் காண்பது கடினம். இதனைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் (தமிழ் மறவன்) Tamil Yeoman (Cirrochroa thais),என்ற வண்ணத்துப்பூச்சி, தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையும் பிறப்பித்துள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி, அடர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான நீலகிரியில், குன்னூர், கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் காண முடியும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>